New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/03/Thalapathy-Vijay-Daughter-Divya-Shasha-1.jpg)
Thalapathy Vijay Daughter Divya Shasha (1)
தோழிகளுடன் திவ்யா சாஷா நேரம் செலவிடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Thalapathy Vijay Daughter Divya Shasha (1)
Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் அன்போடு 'தளபதி' என்று அழைத்து வருகிறார்கள். விஜய் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி விட்டால் அந்த படம் ரிலீசாவது வரைக்கும், படம் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் இணையத்தில் ட்ரெண்ட் செய்வார்கள். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் விஜய் கலந்துக் கொள்ளும் படங்களும் உடனே வைரலாகும்.
வாழ்க்கை வரலாற்று தொடர்: வாய்ப்பை கைப்பற்றுவது அனுஷ்காவா? சமந்தாவா?
தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் ’மாஸ்டர்’ படத்தை திரையில் காண காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். விஜய்யின் மகன் சஞ்சய், அவர் நடித்த ’வேட்டைக்காரன்’ படத்தில் ஒரு பாடலில் தோன்றினார். இப்போது குறும்படங்களில் நடிப்பதிலும் அதனை இயக்குவதிலும் விருப்பம் காட்டி வருகிறார். சஞ்சய் நடித்த குறும்படங்கள் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
விஜய்யின் மகள் திவ்யா சாஷா அவர் நடித்த ’தெறி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார். பாட்டி, அப்பாவைப் போலவே பாடுவதில் விருப்பம் காட்டி வருகிறார் சாஷா. அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தனது தோழிகளுடன் திவ்யா சாஷா நேரம் செலவிடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப்படத்தில் திவ்யாவும், அவரது தோழிகளும் ஒரே மாதிரியான உடை அணிந்திருக்கிறார்கள். இந்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பேட்டி கொடுக்க விஜயபாஸ்கருக்கு தடை?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.