scorecardresearch

விஜய்யிடம் கதை சொன்ன வெற்றிமாறன்: தளபதி ’65’?

‘தளபதி 65’ படத்தில் இந்த க்ளாஸ் இயக்குநரும், மாஸ் ஹீரோவும் இணைவார்கள் என்று தெரிகிறது.

vetrimaaran meets thalapathy vijay
வெற்றிமாறன் – விஜய்

Director Vetrimaaran Meets Thalapathy Vijay :  தமிழ் சினிமாவின் க்ளாஸ் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், தளபதி விஜய்யை சந்தித்து, அவரிடம் கதை சொல்லியிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மேற்படி, அனைத்தும் கைகூடினால் ‘தளபதி 65’ படத்தில் இந்த க்ளாஸ் இயக்குநரும், மாஸ் ஹீரோவும் இணைவார்கள் என்று தெரிகிறது. 2018-ம் ஆண்டின் துவக்கத்திலும் இவர்கள் சந்தித்ததாகவும், அப்போது வெற்றிமாறன் சொன்ன கதை விஜய்க்கு பிடித்திருந்ததாகவும் அப்போதே செய்திகள் உலா வந்தன.

வெற்றி மாறன் இயக்கியிருந்த ‘அசுரன்’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் – வெற்றி இணைந்திருந்த அப்படம் இருவருக்கும் மீண்டும் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து, எல்ரெட் குமார் தயாரிக்கும் ஒரு படத்தை சூரியை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் இயக்கும் அறிவிப்பும் வெளியானது. இதற்கிடையே விஜய் – வெற்றிமாறன் இணையும் படத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஆவல் அதிகரிக்கிறது. காரணம், நடிகர் சூர்யாவும் வெற்றிமாறனின் படத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தின் படபிடிப்பில் சென்னையில் உள்ளார். இங்கு படபிடிப்பை நிறைவு செய்த பின்னர் விரைவில் கர்நாடகாவின் ஷிமோகாவின் முக்கிய பகுதியில் விஜய் – விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றன.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Thalapathy vijay director vetrimaaran thalapathy

Best of Express