scorecardresearch

சங்கீதா அண்ணி, எஸ்.ஏ.சி அப்பா,ஷோபா மா : விஜய் குடும்பம் மீது அன்பை தெளிக்கும் விஜய்யின் பீஸ்ட் ரசிகர்கள்…

சங்கீதா அண்ணி, எஸ்.ஏ.சி அப்பா,ஷோபா மா : விஜய் குடும்பம் மீது அன்பை தெளிக்கும் விஜய்யின் பீஸ்ட் ரசிகர்கள்…

actor vijay family

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மாஸ்டர், தளபதி விஜய்யின் பிறந்தநாள் இன்று உலகம் முழுவதிலுமுள்ள உள்ள விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பீஸ்ட் படம் வரை 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் தளபதி விஜய்.

சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை தன் பிள்ளைகள் மீது மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்கிறார் விஜய். மனைவி சங்கீதாவை பொறுத்தவரை விஜய் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அப்போதும் மேடையில் பேசுவது, பேட்டி கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து விடுகிறார்.

விஜய் ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை கொண்டாடுவதை போல் அவரது திருமண நாள், அவர்கள் அண்ணி என்றழைக்கும் சங்கீதா விஜய் ,அப்பா என பாசமாக இருக்கும் எஸ்.ஏ.சி என அவர்களையும் கொண்டாட மறப்பதில்லை. மேலும் விஜய்யின் குழந்தைகளையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் குடும்பத்தினர் புகைப்படங்கள்,வீடியோக்கள் வெளியானால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதை வைரலாக்கி விடுகிறார்கள்.

இலங்கையை சேர்ந்த விஜய் மனைவி சங்கீதா அவரின் தீவிர ரசிகை. இருவீட்டாரின் சம்மதத்துடன் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜய் – சங்கீதா திருமணம் நடந்தது. ஆகஸ்ட் மாதம் வந்தால் விஜய் திருமண வாழ்வில் 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்
துறுதுறுவென இருந்த விஜய் தங்கை வித்யா இறப்பிற்கு பிறகு அதற்கு நேர்மாறாக அமைதியான தனிமை விரும்பியாக மாறினார். இதில் இருந்து அவர் மீண்டு வர வேண்டும் என விரும்பியே அவரது திருமணத்தை சீக்கிரம் நடத்தி வைத்திருக்கிறார்கள் பெற்றோர்.

தனது அம்மா ஷோபா இயக்கத்தில் வெளியான ‘நண்பர்கள்’, ‘இன்னிசை மழை’ ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளார் விஜய்.

விஜய் – சங்கீதா தம்பதிக்கு ஜாக்சன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். மகள் திவ்யா தெறி திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் தோன்றி அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார். சென்னையில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அங்கு தனது தோழிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று முன்பு வெளியானது. அதை விஜய் ரசிகர்கள் வைரலாக்கினர். சாஷா படிப்பை தாண்டி பேட்மிண்டன் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சஞ்சய் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டு அசத்தியிருந்தார். இவருக்கு விஜய் போல நடிப்பு மீது ஆர்வம் அதிகம். சஞ்சய் திரைப்பட துறை தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் . ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார்.

ஜங்ஷன், சிரி போன்ற குறும்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சஞ்சய் கார் ஓட்டிக்கொண்டே தனது பெண் தோழி மற்றும் நண்பர்களுடன் செல்லும் வீடியோ வைரலாகியது. அச்சு அசல் விஜய் சாயலில் இருக்கும் அவரது மகனும் திரைப்படங்களில் நடிப்பாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Thalapathy vijay fans celebrates his family members too