மக்களவைத் தேர்தல் தமிழ் நாட்டில் வரும் 18-ம் தேதி நடைப்பெறுகிறது.
இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
பா.ஜ.கவுடன் இணைந்து அ.தி.மு.க-வும், காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தி.மு.க-வும் இத்தேர்தலில் களம் காணுகின்றன.
இந்நிலையில், ”இது தளபதி ரசிகன் / ரசிகையின் இல்லம், அ.தி.மு.க-வினர் ஓட்டு கேட்டு வர வேண்டாம்” என விஜய் ரசிகர்கள் ஆளும் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் படத்தை அ.தி.மு.க-வினர் பலமாக எதிர்த்தனர்.

இந்நிலையில் ஆளும் கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விருதுநகர் விஜய் மக்கள் இயக்க பெண்கள் பிரிவு தலைவர் ஜெகதீஸ்வரி, ”சர்கார் ரிலீஸின் போது எங்களது சொந்த பணத்தில் பேனர் வைத்தோம். நாங்கள் சொல்ல வருவதைக் கூட கேட்காமல் அத்தனையையும் அதிமுக-வினர் கிழித்தெறிந்தார்கள். இதனை எந்த விஜய் ரசிகரும் மறக்க முடியாது.
இப்போது வாக்குக்காக அவர்கள் எங்களைத் தேடி வருகிறார்கள். எங்களது கோபத்தைக் காட்ட வீட்டுக்கு வெளியில் இப்படியான பேனரை நாங்கள் வைத்துள்ளோம்” என்றார்.