/tamil-ie/media/media_files/uploads/2018/10/actor-vijay...jpg)
Thalapathy: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய்.
குழந்தைகள், ஆண்கள், பெண்கள், பெரியோர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தனது நடிப்பால் ஈர்த்திருப்பவர்.
நடிப்பு, காமெடி, நடனம், பாடல் என அனைத்தையும் மிக இயல்பாக செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். இவரைப் பற்றிய சின்ன விஷயத்தைக் கூட இணைய விஜய் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் டிரெண்ட் செய்து கொண்டாடுவார்கள்.
தற்போது விஜய் அட்லீயின் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘தளபதி 63’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில், கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.
Trend Alert : We kickstart the much awaited June month with a tag at 6.30PM tomorrow ????
Need all your support Thalapathy fans ❤️ pic.twitter.com/fkmyUSMXtb
— Vijay Fans Trends (@VijayFansTrends) 31 May 2019
இந்தப் படத்தைப் பற்றி ஏதாவது ஒரு சின்ன செய்தி வெளிவந்தாலும், அதை டிரெண்ட் செய்து ட்விட்டரை தெறிக்க விடுவது விஜய் ரசிகர்களின் வழக்கம்.
அந்த வகையில் வரும் 22-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் விஜய். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடுவார்கள்.
அதன்படி இந்த பிறந்தநாளுக்கு எந்த ஹேஷ்டேக்கில் டிரெண்ட் செய்ய வேண்டும் என்பதை ’விஜய் ஃபேன்ஸ் டிரெண்ட்ஸ்’ எனப்படும் அதிகாரப்பூர்வமான டிரெண்ட்ஸ் பக்கம் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுகிறது.
இதற்காக மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜய்யின் இணைய ரசிகர்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us