’தளபதிய பாத்ததுல செம்ம ஹேப்பி’: வைரலாகும் விஜய் வீடியோ கால்!

நண்பர்கள் அனைவரும் மனம் விட்டு சிரிப்பதைப் பார்க்க, மகிழ்ச்சியாக உள்ளது.

By: Updated: August 3, 2020, 10:27:58 AM

Thalapathy Vijay: நடிகர் விஜய் தனது நட்பைக் கையாளும் விதம் பற்றி அவரது ரசிகர்களும், திரைப்பட ஆர்வலர்களும் நன்கு அறிவார்கள். நடிகர்கள் ஸ்ரீநாத் மற்றும் சஞ்சீவ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் கும்பல் அவ்வப்போது சந்திப்பதை இணையத்தில் வெளியாகும் படங்களின் மூலம் நாம் தெரிந்துக் கொள்கிறோம். கொரோனா தொற்று நோய், மக்களை அவரவர் வீடுகளில் தங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளதால், விஜய்யும் அவரது நண்பர்களும்  சந்திப்பது கடினமாகிவிட்டது.

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை… வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

மற்ற நண்பர்கள் தினத்தைப் போலல்லாமல், இந்த ஆண்டு, தங்களது நட்பைக் கொண்டாடுவதை கொரோனா கெடுத்து விட்டது. இருப்பினும், அது விஜய் மற்றும் அவரது நண்பர்களின் உணர்வைத் தடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் வீடியோ கால் மூலம் ஒன்று கூடி, இதயப்பூர்வமான உரையாடலைக் கொண்டிருந்தனர்.

நண்பர்களுடன் விஜய் பேசிய வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை விஜய்யின் நெருங்கிய நண்பர், சஞ்சீவும் ட்விட்டரில் பகிர்ந்தார். அதில், நண்பர்கள் அனைவரும் மனம் விட்டு சிரிப்பதைப் பார்க்க, மகிழ்ச்சியாக உள்ளது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது, மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த படம் அனைத்து பிரச்னைகளையும் மறக்க செய்வதாக இந்த பயனர் தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் முடிந்து மாஸ்டர் ரிலீஸ் ஆகுற வரைக்கும் இப்படி அடிக்கடி வீடியோ கால் பேசுங்கள். இது தான் எங்களுக்கு தரிசனம் என அஜய் தெரிவித்துள்ளார்.

நல்ல நண்பர்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இப்போ தான் அண்ணன பாக்குறோம்.

இடைவெளிக்குப் பிறகு தலைவரை பாத்தாச்சு.

சுவாரஸ்யமாக விஜய்யின் வரவிருக்கும் படமான ’மாஸ்டர்’, படத்தின் பெண் கதாபாத்திரமான மாளவிகா மோகனன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் விஜய்யுடன் சேர்ந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டிருந்தனர். இதனை உற்சாகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் மாளவிகா.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Thalapathy vijay friendship day video call wishes sanjeev

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X