’ரெய்டும் ஜாலியா தான் இருக்கு’: மாஸ்டர் ஆடியோ லாஞ்சில், கலகல விஜய்!

Master Audio Launch : நம்மள சில பேர் வணங்குவாங்க, வரவேற்பாங்க, நம்ம மேல கல்லெறிவாங்க. ஆனா நாம நம்மளோட வேலைய செஞ்சிட்டு போய்ட்டே இருக்கணும்.

By: Updated: March 16, 2020, 10:29:31 AM

Thalapathy Vijay Speech : தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று சென்னையில் நடந்தது. இதில் மாஸ்டர் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். விஜய்யின் சிறந்த திரை ஜோடியாகக் கருதப்படும் சிம்ரன் நடனமாடினார். கறுப்பு கோட் சூட்டில் கிளாஸியாக வந்திருந்தார் விஜய். பொதுவாக அவர் எந்த விழாக்களிலும் கோட் சூட் போடுவதில்லை. நேற்று அவரின் உடை ரசிக்கும்படியாக இருந்தது. தொடர்ந்து, மாஸ்டர் குழுவினர் அனைவரும் பேசி முடித்தப் பிறகு இறுதியாக மேடை ஏறினார் விஜய்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா – ஸ்பெஷல் புகைப்படங்கள்

Master Audio Launch, Thalapathy Vijay Kutty Fans விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடிய ’குட்டி ஃபேன்ஸ்’

மைக் பக்கத்தில் வந்து நின்றதும், ஒலித்துக் கொண்டிருந்த ‘வாத்தி கம்மிங் ஒத்து’ பாடலுக்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஜாலியாக சில ஸ்டெப்களைப் போட்டார். வழக்கமாக நடைபெறும் விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் மத்தியில், பெரிய அரங்கத்தில் நடைபெறும். அப்படி மாஸ்டர் ஆடியோ லாஞ்சும் நடந்து, அங்கு விஜய் இப்படி ‘ஸ்டெப்’ போட்டிருந்தால், சத்தம் விண்ணைப் பிளந்திருக்கும். பார்ப்பவர்களுக்கே படு எனர்ஜியைத் தந்தது.

பின்னர், ”என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள்” எனப் பேசத் தொடங்கினார் விஜய். ”சிம்ரன் ஜி உங்களின் பெர்ஃபாமென்ஸைப் பார்த்து, ஐ வாஸ் ரியலி டச்ட். ஏன்னா இது அவசியமே இல்ல. பட் எங்களுக்காக நீங்க வந்திருக்கீங்க. குட்டி பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எல்லாரும் நல்லா பண்ணுனீங்க, எல்லாருக்கும் நன்றி. இந்த மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் ஃபங்ஷன்ல கலந்துக்க முடியலன்னு ஒரு ரசிகரா, நண்பரா உங்களுக்கு எவ்வளவு ஏமாற்றம் இருக்கோ அத விட அதிகமா எனக்கு இருக்கு. அதுக்குக் காரணம் போன படத்தோட ஆடியோ லாஞ்ச்ல, அரங்கத்துக்கு வெளில நடந்த சின்ன சின்ன பிரச்னை தான். அத மறுபடியும் நீங்க எல்லாரும் ஃபேஸ் பண்ணக் கூடாதுன்னும், இப்போ இருக்க ஹெல்த் இஸ்யூவையும் மனசுல வச்சு தான். அரை மனசோட தான் இதுக்கு நான் ஒத்துக் கிட்டேன். ஸோ முதல்ல சாரி அண்ட் தேங்க் யூ.

எல்லாப் பாடலுக்குப் பின்னாடியும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும். ஆனா ஒரு குட்டி ஸ்டோரியவே பாட்டா பண்ணிருக்காரு, விழா நாயகன் அனிருத். படத்துக்குப் படம் ஷார்ப் ஆகிட்டு போயிட்டே இருக்காரு. சின்ன சின்ன கேரக்டர்ஸ் பண்ணி, மக்கள் மனசுல பதிஞ்சு இன்னைக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகரா ஆகியிருக்காரு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவர் நெனச்சிருந்தா, அவர் இந்தப் படத்த தவிர்த்திருக்கலாம். அஃப் கோர்ஸ் இது நல்ல நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர் தான். இந்தப் படத்துல நடிக்க அவர் ஏன் ஒத்துக்கிட்டாருன்னு கேட்டு தெரிஞ்சுக்கணும்ன்னு எனக்கு ரொம்ப நாளா ஆசையா இருந்தது. ஒருநாள் அவர் கிட்டயே ஏன்? எதுக்குன்னு கேட்டேன். நான் எதோ பெருசா சொல்லுவாருன்னு பாத்தா, ஸ்மைல் பண்ணிட்டு நம்மள ஆஃப் பண்ணிட்டு போய்ட்டாரு. ’எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும்ன்னாரு’. எனக்கு, என்னடா இந்த மனுஷன் நம்மள இப்படி ஆஃப் பண்ணிட்டாருன்னு இருந்துச்சு. அப்புறம் தான் தெரிஞ்சது, அவர் பேர்ல மட்டும் எனக்கு இடம் கொடுக்கல, மனசுலயும் கொடுத்துருக்காருன்னு. என்ன நண்பா? நன்றி நண்பா.

மாளவிகாவுக்கு அப்படியே தமிழ் ஃபேஸ். தமிழையும் நல்லா பேச கத்துக்கிட்டா, தமிழ்ல பேசப்படுற நடிகையா வருவீங்க. ஆண்ட்ரியா நீங்க செலக்ட் பண்ணி தான் நடிக்கிறீங்க. பட் தமிழ்ல இன்னும் நெறைய படத்துல நடிக்கணும். சாந்தனு என்னோட பிரேயர்ஸ்ல எப்போவும் இருக்கீங்க ப்ரோ. உங்களோட பிரேக்குக்காக எல்லோரும் காத்துக்கிட்டு இருக்கோம். ஒவ்வொருத்தரோட ஒர்க்க பத்தியும் நான் தனித் தனியா பேசுறத விட அவங்க ஒர்க்கே பேசும், பேசப்படும்.

லோகேஷ், ‘மாநகரம்’ திரும்பி பாக்க வச்சாரு. ‘கைதி’ திரும்ம திரும்ப பாக்க வச்சாரு. ‘மாஸ்டர்’ என்ன பண்ண போறாருன்னு தெரில. உங்கள மாதிரி நானும் ஃபைனல் அவுட் பாக்க காத்துக்கிட்டு இருக்கேன். லோகேஷ் எனக்கு குட்டி ஆச்சர்யம். பேங்க்ல வேலை செஞ்சிட்டு இருந்தாரு, கட் பண்ணா ‘மாநகரம்’. இடைல அவர் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து சின்ன சின்ன ஷார்ட் ஃபிலிம் பண்ணிருக்காரு. யாரு கிட்டயும் வேலை செய்யல. அவர் கைல சீன் பேப்பரே இருக்காது. இந்தப் படத்துல 2,3 நாள் தெறிச்சிட்டேன். வருவாரு, சார் அந்தஃப்ரெண்ட் அப்படி சொல்வாரு, அதுக்கு நீங்க இப்படி சொல்லணும்ன்னு சொல்வாரு. நான்லாம் வெறியாகி மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன். என்ன விடுங்கடா நான் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டேன். அப்புறம் தான் நண்பா சீன் பேப்பர் கொடுத்துடுங்க அத ஃபாலோ பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன். மொத்த டீம் கூட நல்ல கம்ஃபோர்ட் ஸோன் இருந்தது.

படம் நீங்க பாத்துட்டு சொல்லுங்க, எங்க வேலைய நாங்க செஞ்சிருக்கோம். கடைசியா ஒரு குட்டி….. இத கதைன்னு சொல்ல முடியாது, இத எப்படி வேணும்னாலும் நீங்க எடுத்துக்கலாம். என் படத்துலயே ஒரு ஃபேமஸ் சாங் இருக்கு. “எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக் கொண்டிரு…” நம்ம எல்லாரோட லைஃப்பும் நதி போல தாங்க. ஒரு நதி புறப்பட்டு வரும் போது, கொஞ்ச பேர் விளக்குகள ஏத்தி வணங்குவாங்க, நதி போய்க்கிட்டே இருக்கும். இன்னொரு இடத்துல பூக்கள தூவி வரவேற்பாங்க, நதி போய்க்கிட்டே இருக்கும். வேறொரு இடத்துல நதிய புடிக்காத சில பேர், அது மேல கல்லெறிஞ்சு விளையாடுவாங்க, நதி போய்க்கிட்டே இருக்கும். அது மாதிரி தான் நம்ம வாழ்க்கையும். நம்மள சில பேர் வணங்குவாங்க, வரவேற்பாங்க, நம்ம மேல கல்லெறிவாங்க. ஆனா நாம நம்மளோட வேலைய செஞ்சிட்டு போய்ட்டே இருக்கணும். பாட்டுல வர்ற மாதிரி, ‘லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, ஆல்வேஸ் பி ஹேப்பி. டிசைன் டிசைனா, பலவித பிரப்ளம் வில் கம் அண்ட் கோ, கொஞ்சம் சில் பண்ணு மாபி. கில் தெம் வித் யுவர் சக்சஸ், பரி தெம் வித் யுவர் ஸ்மைல்… உண்மையா இருக்கணும்ன்னா சில நேரத்துல ஊமையா இருக்க வேண்டியதா இருக்கு. நா வரேங்க” என்றவாறு பேச்சை முடித்துக் கொள்ள நினைத்தார் விஜய்.

ஆனாலும் தொகுப்பாளர்கள் விஜய்யும், பாவனாவும் விடவில்லை. ’கோட் சூட்ல ஸ்டைலா, மாஸா, சூப்பரா இருக்கீங்க அண்ணா. ரொம்ப அழகா இருக்கீங்க’ என்றார் விஜய். ”நம்ம காஸ்ட்யூமர் பல்லவி. அவங்க தான் ஒவ்வொரு பங்ஷனுக்கும் புவரா டிரெஸ் பண்ணிட்டு போற, இந்த முறை சூட் போடலாம், எதாச்சும் புதுசா ட்ரை பண்ணலாம்ன்னு, சரி நம்ம நண்பர் அஜித் மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு போலாம்ன்னு” என்று விஜய் சொன்னதும், அரங்கத்தில் ரசிகர்கள் சத்தம் அதிகமானது.

‘நண்பர்’ அஜித் போல உடை அணிய நினைத்த விஜய்: மாஸ்டர் ஆடியோ லான்ச் ஹைலைட்ஸ்

நெய்வேலியில் ரசிகர்கள் கூடியதை, மறக்க முடியாத மொமெண்ட் எனக் குறிப்பிட்ட விஜய், ”வேற லெவல்ங்க நீங்க” என்றார். ’இப்போ இருக்குற தளபதி, 20 வருஷம் முன்னாடி போய் இளைய தளபதி கிட்டே என்ன கேப்பாரு” என்ற கேள்விக்கு, “நீ வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கைய திருப்பிக் கொடுன்னு கேப்பேன். அப்போ இந்த ரைடு கிய்டு எல்லாம் இல்லாம பீஸ் ஃபுல்லா இருந்தேன். இப்போவும் எல்லாம் ஓகே தான். ஜாலியா தான் இருக்கு” என்ற விஜய். தான் வாங்கிய முத்தத்தை, விஜய் சேதுபதிக்கு திருப்பிக் கொடுத்தார். இறுதியாக, ‘மாஸ்டர்’ குழுவினருடன் இணைந்து மேடையில் செல்ஃபி எடுத்துக் கொண்டார் தளபதி விஜய்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Thalapathy vijay full speech master audio launch

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement