சமீபத்தில் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் மக்களுக்க நிவாரண பொருட்கள் வழங்கினார்.
ஆங்கிலத்தில் படிக்க : Thalapathy Vijay steps forward to assist those affected by heavy rains in Tamil Nadu’s Thoothukudi, Nellai. See pics, videos
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் தென் மாவட்டங்களான, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் பெய்தகனமழை பேரழிவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, அடிப்படை தேவைகளுக்கே அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படடனர்.
இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் பேரிடர் மீட்பு குழு கடுமையான போராட்டங்களுக்கு பிறகு மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்டெடுத்தனர். தற்போது மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், நடிகர் “தளபதி” விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு துயரத்தில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக, இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்த நடிகர் விஜய், நெல்லை மாவட்டத்தில் உள்ள மாதா இல்லத்திற்குச் சென்றார்.அவரது வருகையின் போது, அங்கிருந்த சிலருடன் அவர் உரையாடினார் மற்றும் அவர்களுடன் செல்பி கூட எடுத்தார். அதனைத் தொடர்ந்து மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதேபோல், கடந்த வாரம் சென்னையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கினர்.
தமிழக அரசியலில் விஜய்யின் விரைவில் களம் காணுவார் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சமீப காலமாக விஜயின் நடவடிக்கைகள் அந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 2024 லோக்சபா தேர்தலைத் தொடர்ந்து விஜய் தனது கட்சியைத் தொடங்க விரும்புவதாகவும், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்று யோசித்து வருவதாகவும் நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.
விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜின் ஆக்ஷன் த்ரில்லர் லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2023 இன் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக மாறியது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்காலிகமாக தளபதி 68 என்று பெயரிடப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“