scorecardresearch

திரை தீப்பிடிக்க சஞ்சய் தத் என்ட்ரி… கட்டிப்பிடித்து வரவேற்ற விஜய்… லியோ அப்டேட்

மாஸ்டர் என்ற சூப்பர்ஹிட் படத்திற்கு பின் விஜய் லோகேஷ் இணையும் 2-வது படம் லியோ.

திரை தீப்பிடிக்க சஞ்சய் தத் என்ட்ரி… கட்டிப்பிடித்து வரவேற்ற விஜய்… லியோ அப்டேட்

தளபதி விஜய் நடித்து வரும் லியோ படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்தது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வரும் நிலையில், இயக்குனர் மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவெ மிஷ்கின் கவுதம்மேனன், அர்ஜூன் ஆகியோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் லியோ படப்பிடிப்பில் இணைந்துள்ளார். கே.ஜி.எஃப் 2 படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் லியோ படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத்-க்கு தளபதி விஜய். உள்ளிட்ட படக் குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  

விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சஞ்சய், பின்னர் விஜய் மற்றும் லோகேஷ் ஆகியோரை சந்தித்தார். படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “சிவப்பு கம்பளத்தை விரிக்கவும் சஞ்சய் தத் திரையில் தீ பிடிக்கஸ்டைலாக வந்துள்ளார். நீங்கள் பிரத்தியேக வீடியோவைக் கேட்டீர்கள், நாங்கள் அதைக் கொடுத்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளது.

இதில் விஜய் வெள்ளை தாடியுடன் இருக்கிறார். மேலும் விஜய் த்ரிஷா காமினேஷனில், இது 5-வது படமாகும். அதேபோல் மாஸ்டர் என்ற சூப்பர்ஹிட் படத்திற்கு பின் விஜய் லோகேஷ் இணையும் 2-வது படம் லியோ. கைதி மற்றும் விக்ரம் ஆகியோருடன் லியோ லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Thalapathy vijay hugs sanjay dutt as joins leo shoot