/tamil-ie/media/media_files/uploads/2020/04/Thalapathy-Vijay-Kiran-Rathore-Vaadiyamma-Jakkamma-Song.jpg)
Thalapathy Vijay, Kiran Rathore, Vaadiyamma Jakkamma Song
Kiran Rathore: நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக, 'ஜெமினி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை கிரண் ரத்தோட். பின்னர் அஜித் ஜோடியாக 'வில்லன்' படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் கமல்ஹாசனின் 'அன்பே சிவம்' படத்திலும் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு சுந்தர் சி-யின் மாமியாராக 'முத்தின கத்திரிக்காய்' படத்தில் நடித்திருந்தார். அதோடு நடிகர் விஜய்யுடன், ‘திருமலை’ படத்தில் ‘வாடியம்மா ஜக்கம்மா’ என்ற பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார். சமூக ஊடகங்களில் தனது படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் கிரண்.
View this post on InstagramNo touching keep social distancing #socialdistancing#lockdown#funny
A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on
வாட்ஸ் ஆப்-பில் இப்படி மெசேஜ் வந்தால்? உஷாருய்யா… உஷாரு!
இந்நிலையில், ’வாடியம்மா ஜக்கம்மா’ பாடலில் கிரணின் கழுத்தை தொட வரும் விஜய், திடீரென கையை எடுத்து விடுவார். இந்த வீடியோ க்ளிப்பைப் போட்டு, ”தொடக் கூடாது, சமூக விலகலை பின்பற்றுங்கள், கைகளை நன்றாக கழுவுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
View this post on InstagramKeep your hands clean #handwashchallenge #funnyshit
A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on
கிரணின் இந்த சமூக விழிப்புணர்வு வீடியோவுக்கு லைக்குகள் குவிந்தாலும் மறுபுறம் அது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. ஆகையால் அவர்கள் தங்கள் கோபத்தை கமெண்டில் தெரிவித்து வருகிறார்கள். எது எப்படியோ, இந்த சூழலுக்கு தேவையான, விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த கிரணை பாராட்டுவோம்.
நாயகி ஆனந்தி: கண்ணழகி மட்டுமல்ல, கண் ஆராய்ச்சியாளரும் கூட!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.