நடிகர் விஜய்க்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், லண்டனில் இருந்து ரசிகையாக வந்த சங்கீதாவை விஜய் திருமணம் செய்துக் கொண்டதாக விஜய்யின் தாயார் ஷோபா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். தளபதி என்று அழைக்கப்படும் விஜய்க்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். வசீகரமான ஸ்டைல், அசத்தல் நடிப்பு, குழந்தைகளை ஈர்க்கும் காமெடி என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.
நடிகர் விஜய்க்கு 1999 ஆம் ஆண்டு சங்கீதா சொர்ணலிங்கத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில், சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை என்றும், ரசிகையாக விஜய்யை பார்க்க வந்தவர் பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார் என்றும் விஜய்யின் அம்மா ஷோபா பிஹைன்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு ‘பூவே உனக்காக’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய்யின் கேரியர் நேர்மறையான திருப்பத்தை எடுத்தது, அந்த நேரத்தில் சங்கீதா இங்கிலாந்தின் லண்டனில் இருந்து விஜய்யை சந்திக்க வந்துள்ளார். விஜய் சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தார்.
மேலும் லண்டனில் இருந்து தனது கனவு நாயகனை சந்திக்க வந்தத்திருந்த சங்கீதா, விஜய்யின் சமீபத்திய படத்தின் வெற்றிக்காக பாராட்ட விரும்பினார். சங்கீதாவின் தந்தை இங்கிலாந்தில் குடியேறிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர்.
சங்கீதாவுடைய அப்பாவித்தனம் மற்றும் நடத்தையால் ஈர்க்கப்பட்ட விஜய், அவரை தனது வீட்டிற்கு வரவழைத்து தனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினார். சங்கீதா அருகிலேயே வசிப்பதை அறிந்த விஜய் அவரை மீண்டும் ஒருமுறை தன் வீட்டிற்கு அழைத்தார். விஜய்யின் பெற்றோர்தான் திருமணத்தை முன்மொழிந்தனர், இருவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். விஜய்யின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் சங்கீதாவின் பெற்றோரைச் சந்திக்க லண்டன் சென்றனர், மேலும் அவர்கள் திருமணத்திற்கு பரஸ்பரம் ஒப்புக்கொண்டனர்.
விஜய்யும் சங்கீதாவும் ஆகஸ்ட் 25, 1999 அன்று திருமணம் செய்து கொண்டனர். விஜய் ஒரு கிறிஸ்தவர், மற்றும் சங்கீதா ஒரு இந்து, ஆனால் அவர்கள் இந்து திருமண விழாவைத் தொடர்ந்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்தனர்.
கடந்த ஆண்டு, விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து பெற்று 28 ஆண்டுகால உறவை முறித்துக் கொண்டதாக பல வதந்திகள் வந்தன. ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பிரியா -அட்லீயின் வளைகாப்பு விழாவை சங்கீதா தவறவிட்டதால் இந்த வதந்திகள் கிளம்பின. இருப்பினும், இவை வெறும் வதந்திகள் என்று பின்னர் வந்த தகவல்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“