தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை நேரடியாக ஆன்லைனில் வெளியிடுவதற்கான சாத்தியம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். ’மாஸ்டர்’ ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படம் என்று குறிப்பிட்ட அவர், இது ஓடிடி தளத்தில் வெளியாக சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார்.
தனியார் கல்லூரிகளில் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு
“இது குறித்து விஜய் மிகவும் தெளிவாக இருக்கிறார். தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும்போது தான் மாஸ்டரை வெளியிட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அது இந்த தீபாவளியாகவோ அல்லது அடுத்த பொங்கலாகவோ இருக்கலாம்” என சேவியர் பிரிட்டோ முன்னணி தமிழ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால், அதன் வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று சொல்ல முடியாததால், சில மீடியம் பட்ஜெட் தமிழ் திரைப்படங்கள் டிஜிட்டல் வெளியீட்டைத் தேர்ந்தெடுத்தன. மற்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இந்த கொரோனா புயல் கரையைக் கடக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
பெரிய பட்ஜெட் திரைப்படங்கள், ஆன்லைன் தளங்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் அவற்றின் செலவில் 30 சதவீதத்தை மட்டுமே மீட்டெடுக்க முடியும், என்கிறார்கள் ட்ரேடிங் அனலைஸ்ட்.
இதற்கிடையில், கொரோனா பிரச்னை சரியாகி, தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் போது, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்கள், மக்களை மீண்டும் சினிமா அரங்குகளுக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.
’என்னோட பேர், புகழ், வசதிக்குக் காரணம் கே.பி. சார் தான்’ ரஜினி புகழாரம்!
’மாஸ்டர்’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். படத்தில் முக்கிய வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”