/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-51.jpg)
vijay, actor vijay, vijay 64, thalapathy 64, master movie, master update, box office baasha vijay, thalapathy vijay, vijay, விஜய், மாஸ்டர் பட வியாபாரம், தளபதி விஜய், ரசிகர்கள், கொண்டாட்டம், டுவிட்டர்
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமல்லாது சர்வதேச நாடுகளுக்கான விநியோகம் நிறைவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
மாநகரம், கைதி வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு, தளபதி விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு வந்தது. இதை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர் ஸ்கிரிப்ட் வேலைகளில் மும்முரமானார். இந்த கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணை தயாரிப்பாளராக உள்ளனர்.
We are glad to announce the massive distributors List of #Master ????#MasterHasArrived#MasterUpdate#MasterBusinessUpdatepic.twitter.com/vS6kVZmkEv
— XB Film Creators (@XBFilmCreators) January 12, 2020
டில்லி, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
75 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளது. மாஸ்டர் படத்தை, படக்குழு, தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, படத்தின் விநியோக பணிகள் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த படத்தை வெளியிடும் உரிமையை, லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் கைப்பற்றியிருக்கும் நிலையில், தமிழகம், கேரளா, ஆந்திரா தொடங்கி வெளிநாடுகளுக்கான விநியோகம் முடிவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் 3 மாதகாலம் இருக்கும் நிலையில் படத்துக்கான பிசினஸ் முடிவடைந்திருப்பது தமிழ்த் திரையுலகில் ஆச்சர்யத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் தளபதி நடிப்பிலான படத்தின் வியாபாரம் அதற்குள் முடிவடைந்துள்ளதை கொண்டாடும் வகையில், விஜய் ரசிகர்கள், டுவிட்டரில் #BoxOfficeBaashaVIJAY என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.