Thalapathy Vijay: நடிகர் விஜய் கடந்த வாரம் கட்சி தொடங்கியதாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், தற்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்துவது தெரிய வந்துள்ளது.
23 வயதில் முதலீடு செய்ய் வேண்டிய மிகச் சிறந்த முதலீடு இதுவே.. வட்டி மட்டுமே 7.1% கிடைக்கும்!
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகர் தொடங்கியுள்ளார். இதன் தலைவராக திருச்சி ஆர்.கே.ராஜா என்கிற பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சி ஆகியோரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கட்சிக்கு விஜய் சார்பில் மறுப்பும் எதிர்ப்பும் தெரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், “மக்களுக்கு நல்லது செய்ய விஜய் பெயரில் கட்சி தொடங்கியுள்ளேன். விஜய்யை சுற்றி கிரிமினல்கள் உள்ளனர். அவர் விஷ வலையில் சிக்கியுள்ளார் என்று கூறியிருந்தார் எஸ்.ஏ.சி. இந்நிலையில், நடிகர் விஜய் தனது சென்னை பனையூர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
தாத்தா போனதும் பாட்டி எண்ட்ரி: சுவாரஸ்யமான பிக் பாஸ் டாஸ்க்!
இந்த நிகழ்வு, மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்பாட்டில் நடக்கிறது. மாவட்ட நிர்வாகிகள் விஜய் அலுவலகத்தில் காலை 10 மணியளவிலிருந்து காத்திருந்தனர். 11 மணிக்கு மேல் நிர்வாகிகளைச் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கள நிலவரம், எதிர்கால திட்டமிடல் குறித்து இதில் ஆலோசனை நடத்துவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”