ஆசியாவின் சிறந்த படமாக விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் 3 வேடங்களில் நடித்து கடந்த வருடம் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தின் புகழ் தற்போது வரை ஓயவில்ல.
பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே உலகம் முழுவதும் இத்திரைபடம் வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்தது.இப்படத்தில் இடம்பெற்ற பாடலாசிரியர் விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்” பாடல் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில், ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், ‘மெர்சல்’ படத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்கும்படி போராட்டங்களும் நடத்தினர். ‘மெர்சல்’ படத்துக்கு இந்த எதிர்ப்பு மூலம் இலவச விளம்பரம் கிடைத்தது. எனவே, படத்தின் வசூலும் அதிகமானது.
திரைப்படம் வெளியான முதல் நாளே ரசிகர்களை படத்தை தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். அன்றிலிருந்து இன்று வரை விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் திரைப்படம் ‘எவர் டை ஃபேவரெட்’ படமாக அமைந்து விட்டது.உலகளவில் ஈர்த்ததால் உலக திரைப்பட விழாக்களில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட்டு வருகின்றது. வரும் செப்டம்பர் 22ம் தேதி லண்டனில் நடைப்பெற உள்ள ஐஏஆர்ஏ விருதுக்கு மெர்சல் படம் பரிந்துரைக்கப்பட்டதால், அதில் நடித்த விஜய்யின் பெயர் ஹாலிவுட் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்று அசத்தினார்.
#Mersal goes international! Producer @Hemarukmani1 was a part of the quality discussion with various panelists from the other parts of the world.!???? #BIFAN pic.twitter.com/rEj38PrUN2
— Thalapathy Vijay (@Actor_Vijay) 28 July 2018
இந்நிலையில் தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக 'மெர்சல்' படத்தையும் தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளருமான ஹேமா ருக்மணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.