Thalapathy Vijay's Vaathi coming : தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். இன்று ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவில் இருப்பதால், ரிலீஸ் தள்ளிப்போனதோடு, மற்ற துறைகளைப் போல், சினிமா துறையும், பெரும் சரிவை சந்தித்திருக்கிறது.
தவிர, மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், தீனா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்துக்கு இசை அனிருத். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக இந்த லாக் டவுன் சமயத்தில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தொகுப்பாளினி பாவனா, அவரது தோழி சம்யுக்தாவுடன் வித்தியாசமான முறையில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பரதநாட்டியமாடி அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதற்கிடையில் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்ட தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினி, 'வாத்தி கமிங்' பாடலுக்கு நடனமாடி, அதனை டிக் டாக்கில் பதிவேற்றியுள்ளார். தனது கணவர் யோகேஸ்வரன் மற்றும் சகோதரர் பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் இந்தப் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் மைனா.
லாக் டவுன் ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பவர்களுக்கு, இந்த மாதிரியான வீடியோக்கள், ஒருவித புத்துணர்ச்சியை தருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.