விஜய்யின் ‘வெறித்தனம்’ டிக்டாக்கால் வைரலான பிரபல இயக்குநரின் மகள்!

Verithanam Song: வெறித்தனம் பாடலில் இடம் பெற்றுள்ள ‘புள்ளிங்கோ’ என்ற சொல்லாடலை மையப்படுத்தி பல மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

Hazel Shiny Verithanam Tik tok
Hazel Shiny Verithanam Tik tok

Vijay’s Verithanam Song: நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

அதோடு முதல் முறையாக ரஹ்மான் இசையில் ’வெறித்தனம்’ எனத் தொடங்கும் பாடலை பாடியிருக்கிறார் விஜய். பிகில் படத்தின் செகண்ட் சிங்கிளாக வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சென்னை வட்டார மொழியில் பாடல் வரிகள் அமைந்துள்ளதும், அதை விஜய் பாடியிருப்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகமாக அமைந்துள்ளது. யூ ட்யூபில் மட்டும் இதுவரை 25 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்தப் பாடலை பார்த்திருக்கிறார்கள்.

குறிப்பாக வெறித்தனம் பாடலில் இடம் பெற்றுள்ள ‘புள்ளிங்கோ’ என்ற சொல்லாடலை மையப்படுத்தி பல மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதோடு இந்தப் பாடலை டிக் டாக் வீடியோவும் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

 

View this post on Instagram

 

Kola pana poren ???? + nee nikka vendiya edam idhu ila ???????? #vadivelu #comedy #tamil #tamilcomedy #tamilmovie #hazelshiny #tamilgirl

A post shared by SHINY (@hazelshiny) on


அந்த வகையில், வெறித்தனம் பாடலுக்கு டிக்டாக் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் பிரபு சாலமனின் மகள் ஹேசல் ஷைனி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. டிக் டாக் பிரியரான ஷைனி பல காமெடி வசனங்களையும் டிக் டாக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது!

 

Web Title: Thalapathy vijay verithanam hazel shiny tik tok

Next Story
வந்த வேலையை சரியாக செய்த வனிதா: மீண்டும் போர்க்களமாக மாறிய பிக் பாஸ்Bigg Boss Tamil 3 day 101, 02.10.19,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express