scorecardresearch

இதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி

ஜனவரி 13 ஆம் தேதியன்று  சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை விஜய் நேரடியாக பார்த்திருக்கிறார்

இதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரை அரங்குகளில் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்திற்கு தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று முன்னதாக விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவுக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையினரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த தளர்வு அனுமதிக்கப்படுவதாகவும் கூறினார்

ஆனால், தமிழக அரசின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றமும், மத்திய உள்துறை அமைச்சகமும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், சமூக ஊடங்களில் நடிகர் விஜயின் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்றை விட மாஸ்டர் திரைப்படம் முக்கியமா? முதலில் விஜய் திரை அரங்கிற்கு செல்வாரா? என்ற கேள்வியும் எழுந்தது.


இந்நிலையில், கடந்த ஜனவரி 13 ஆம் தேதியன்று  சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை விஜய் நேரடியாக பார்த்திருக்கிறார்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடங்களில் வெளியாகி  உள்ளது.  தியேட்டர் நிர்வாகிகளுடன்  கை குலுக்கி சிறிது நேரம்  உரையாடும் காட்சிகள்சிசிடிவி காட்சியில் இடம்பெற்றுள்ளன.

 


இந்த வீடியோ விஜயின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கொரோனா காலத்தில் முதலில் விஜய் திரை அரங்கிற்கு செல்வாரா?  என்று அவர் மீது வீசப்பட்ட கேள்விக்களுக்கு இந்த சிசிடிவி வீடியோ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

விஜய் படம் 3 நாட்களில் தமிழகத்தில் ரூ .50 கோடியை எட்டியுள்ளது. மேலும் அனைத்து ஏரியாக்களிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Thalapathy vijay visited devi theatre for watching master fdfs with fans