Thalapathy Vijay's Wax Statue: தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களுள் மிக முக்கியமான நடிகர் விஜய். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட அரசுப் பள்ளிக்கு, கழிப்பறை, சிசிடிவி கேமரா போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இதற்கிடையே தீபாவளிக்கு வெளியான விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இயக்குநர் அட்லீ இயக்கியிருந்த அந்தப் படத்தில், நயன்தாரா, விவேக், கதிர், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
இந்நிலையில், சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில், ரயில் நிலையம் அருகே உள்ள மாயாபுரி மெழு அருங்காட்சியகத்தில், நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நேற்று முதல் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.இந்த அருங்காட்சியகத்தில், அமிதாப் பச்சன், அன்னை தெரசா, ஒபாமா போன ஜாம்பாவன்களின் மெழுகு சிகைகள் உள்ள நிலையில், தற்போது விஜயின் மெழுகு சிலை வைக்கப்பட்டிருப்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.