/tamil-ie/media/media_files/uploads/2018/09/1-26.jpg)
விஜய்க்கு சர்வதேச விருது : Actor Vijay Wins Best International Award for Mersal
vijay tv show: தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் பட வெற்றி கொண்டாட்டம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது. இந்த ஷோவை விஜய் டிவி கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் கோபிநாத் மற்றும் சிவ கார்த்திகேயன். உங்களுக்கு ஆஹா பார்க்க நல்லா இருக்கு என்று தோன்றும் உங்களுக்கான ஜோடி யார் என்று கேள்வி கேட்டார்கள். ஆப்ஷன்ஸ் வழங்கப்பட்டது.
நண்பன் இலியானவா, காவலன் அசினா, வேலாயுதம் ஹன்சிகாவா என்று கேட்டார் சிவ கார்த்திகேயன். விஜய் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஹன்சிகா என்று சொன்னார். கோபிநாத், விஜய் அவர்களின் மனைவியிடம் கொஞ்சம் மைக்கை கொடுங்கள் என்றபோது, நோ என்று சொல்லிவிட்டார் சங்கீதா விஜய். கொஞ்சம் கண் அசைத்து உங்கள் மனைவிக்கு பர்மிஷன் கொடுங்க விஜய்...சின்ன கேள்விதான் என்று சொன்னார் கோபிநாத்.
#VijayViralMomentspic.twitter.com/nkK4OQXi5P
— Vijay Television (@vijaytelevision) June 23, 2020
அதே போல, விஜய் தனது மனைவியை பார்த்து சிரித்துக்கொண்டே ஜாடை காண்பிக்க, சங்கீதா விஜய் எழுந்து மைக்கை வாங்கிக்கொண்டார். உங்களுக்கு விஜய் யாருடன் நடித்தால் இந்த ஜோடிப்பொருத்தம் நன்றாக இருக்கிறது எனது தோன்றுகிறது என்றபோது ஜெனிலியா என்று தயங்கமால் சொன்னார் சங்கீதா.
உடனே சிவ கார்த்திகேயன், ஜெனிலியான்னு அவங்க சொல்லி இருக்காங்க...நீங்க ஹன்சிகான்னு சொல்லி இருக்கீங்க.. என்ன காரணம் சார் என்று இழுக்க...நீங்க ஜெனிலியா ஆப்ஷன் தரலையே என்று பட்டென்று கூறினார் விஜய்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.