பிகில் FDFS டிக்கெட்டுக்காக மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்!

Bigil Release: முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Bigil fdfs ticket, thalapathy vijay
பிகில்

Thalapathy Vijay: தளபதி விஜய்யின் பிரமாண்ட படமான ’பிகிலின்’ வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. பிகில் மட்டுமல்ல, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கார்த்தியின் ’கைதியும்’ அதே நாள் தான் வெளியாகிறது. இதனால் ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அட்லீ இயக்கியுள்ள பிகில் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா கதாநாயகியாகவும், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், இந்தூஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். பிகில் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை, ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

’பிகில்’ திரைப்படம் அக்டோபர் 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல், பிகில் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாக்குவதற்காக மிக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ரசிகர்கள் டிக்கெட் வாங்க காத்திக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வாவ் சொல்ல வைக்கின்றன. இவையனைத்துக்கும் ஒரே ஒரு காரணம் விஜய் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அன்பு தான்!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thalapathy vijays bigil fdfs ticket booking long queue

Next Story
இத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி!Sushant Singh Rajput, Rhea Chakraborty
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com