இந்திய அளவில் சாதனை செய்த ’மெர்சல்’... மாஸ் காட்டும் ’தளபதி’ விஜய்!

இந்திய அளவில் மெர்சல் திரைப்படத்திற்கு மற்றொரு சிறப்பு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

இந்திய அளவில் மெர்சல் திரைப்படத்திற்கு மற்றொரு சிறப்பு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்திய அளவில் சாதனை செய்த ’மெர்சல்’... மாஸ் காட்டும் ’தளபதி’ விஜய்!

தளபதி விஜய் நடிப்பில்  கடந்தாண்டு  வெளியான மெர்சல் திரைப்படம் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருவதால் ஒட்டு மொத்த திரையுலகின் கவனமும் விஜய் பக்கம் திரும்பியுள்ளது.

Advertisment

கடந்த தீபாவளி அன்று அட்லீ இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம்  தொடர்ந்து இந்திய அளவில் இப்படி சாதனைகளை செய்து வரும் என்று படக்குழுவே எதிர்ப்பார்த்து இருக்கமாட்டார்கள். ஆனால் படம் வெளியானதில் இருந்து வசூல் ரீதியாகவும்,  விமர்சனம் ரீதியாகவும் மெர்சல் திரைப்படம் தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது.

2017 ஆம் ஆண்டு வெளியான  மெர்சல் திரைப்படம்   ரிலீஸுக்கு முன்பே சந்தித்த சர்ச்சைகள்  ஏராளம். படத்தில் இடம்பெறும் வசனங்கள் தொடங்கி, படத்தின் தலைப்பு வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து விட்டு ஒரு வழியாக தீபாவளி அன்று திரையிடப்பட்டது.  திரைப்படம் வெளியான முதல் நாளே ரசிகர்களை படத்தை தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். அன்றிலிருந்து இன்று வரை விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் திரைப்படம்  'எவர் டை ஃபேவரெட்' படமாக அமைந்து விட்டது.

ஆளப்போறான தமிழன் பாடலில் தொடங்கிய  கொண்டாட்டம் இன்று வரை ஓயவில்லை.  இன்னொரு பக்கம் நடிகர் விஜய்-க்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தான் நேற்று இந்திய அளவில் மெர்சல் திரைப்படத்திற்கு மற்றொரு சிறப்பு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

Advertisment
Advertisements

ட்விட்டர் இந்தியா நிறுவனம் சார்பில் நேற்று நடைபெற்ற #வணக்கம்ட்விட்டர் நிகழ்ச்சியில் , . கடந்த ஆண்டு ட்விட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளில் மெர்சல் முதலிடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பை ட்விட்டர் அமைப்பின் தலைவர் தரன்ஜித் சிங் தெரிவித்தார்.

இந்த செய்தியை கேட்டு தளபதி விஜய் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Mersal Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: