By: WebDesk
December 10, 2020, 9:05:17 PM
Thalapathy 65 by SunPictures directed by nelson dilpkumar : நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார் பணிபுரியவுள்ளார். தற்காலிகமாக படத்திற்கு ‘தளபதி 65’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப் குமார் என தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு குடுத்துட்டு இருக்காரு தளபதி . பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2018 ல் கோலமாவு கோகிலா என்ற தமிழ் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கினார். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தார். இணை கதாபாத்திரங்களில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், சார்ள்ஸ் வினோத் மற்றும் ஹரீஸ் பேர்டி ஆகியோரும் நடித்திருந்தனர்.
தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டாக்டர்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்.
விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இயக்கியபோது, சிவகார்த்திகேயன், நெல்சனிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Thalapathy65 actor vijays next film directed by nelson dilpkumar and music by anirudh