/tamil-ie/media/media_files/uploads/2021/10/bigg-boss-thamarai.jpg)
என் மகன் என்னிடம் பேசுவதில்லை, அவனுக்கு என்னோட கஷ்டத்த தெரிவிக்கவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என கண்ணீருடன் பேசியுள்ளார் தாமரைச்செல்வி.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரத்தைக் கடந்து சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷன் உள்ளதால் போட்டியாளர்களிடையே போட்டி கடுமையாகி வருகிறது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் கதை சொல்லட்டுமா சார் என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில், கதை சொல்லட்டுமா சார் டாஸ்க்கில் பேசிய தாமரைச்செல்வி, என்னோட மகனை என்கிட்ட காட்டவே இல்லை, என் மகனை தேடி உறவினர் வீட்டுக்கு போனேன், என் மகன் அவங்களோடவே இருந்துக் கொள்வதாக சொன்னான், என் மகனை பார்த்து 4 மாதம் ஆகிவிட்டது, என் மகனை எனக்கு ரொம்ப பிடிக்கும், இங்க இத சொல்ல வேண்டாம்னு நினைச்சேன், ஆனா அம்மா பட்ட கஷ்டம் அவனுக்கு தெரியாம போயிரும், அதான் சொல்றேன், என்னை பார்க்க மாட்டான், என்கூட போனில் பேச மாட்டான், நான் தப்பு பண்ணிட்டேனு நினைக்குறான், நான் அவனை காப்பாற்ற தான் பிக் பாஸ்க்கு வந்தேன் என கண்ணீருடன் கூறுகிறார்.
#Day10#Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5#BiggBossTamil5#பிக்பாஸ்#nipponpaintindia#PreethiPowerDuo#VijayTelevisionpic.twitter.com/JdD8qGCTru
— Vijay Television (@vijaytelevision) October 13, 2021
இதைக்கேட்டு சகப் போட்டியாளர்களுடம் கண்ணீர் விடுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.