Karthi – Jyothika’s Thambi : ‘பாபநாசம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘தம்பி’. இதில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் முதன்முறையாக சொந்த அண்ணி, ஜோதிகாவுடன் திரையைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. அக்கா, தம்பி என்றதுமே குடும்ப செண்டிமெண்டை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்குமோ, என்ற எண்ணத்திற்கு வந்துவிட வேண்டாம். கதைக்கு என்ன தேவையோ அதை சுவாரஸ்யாமாக சேர்த்திருக்கிறோம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்பதைப் புரிந்துகொண்டு கடின முயற்சி எடுத்து சண்டைகாட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள் என எல்லாவற்றிலும் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜோதிகாவும் அப்படித்தான், அவருடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Live Blog
Thambi Tamil Movie review rating
கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தம்பி படத்தின் விமர்சனத்தை லைவாக இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
கார்த்தி சரியான ரூட்டில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், இதனை அப்படியே தொடரும்படியும் இந்த பயனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தம்பி படத்தில் கார்த்தியின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக, இந்த பயனர் தெரிவித்துள்ளார்.
த்ரிஷ்யம் திரைப்படம் போலவே ஃபேமிலி செண்டிமெண்டுகளை, தம்பி திரைப்படம் கொண்டிருக்கிறது.
ஜோதிகா – கார்த்தி இருவருக்கும் இடையேயான சகோதரத்துவம் சிறப்பாக உள்ளது
கார்த்தி, ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள தம்பி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நிறைய ட்விஸ்ட் நிறைந்த தம்பி திரைப்படம்
பழம் பெரும் நடிகை செளகார் ஜானகி, மாஸ்டர் அஸ்வந்துடன் கார்த்தி வரும் இடங்கள் எல்லாமே சிரிப்பலையை வர வைக்கின்றன.
இன்ரெஸ்டிங்காக இடைவேளையில் தம்பி திரைப்படம்
சிறப்பான த்ரில்லர் திரைப்படம் தம்பி
இண்ட்ரவெல் காட்சி புல்லரிக்க வைத்ததாக இந்த பயனர் குறிப்பிட்டுள்ளார்.
தம்பி திரைப்படம் நல்ல ஃபேமிலி எண்டெர்டெயினராக இருக்கிறது.
அதிகாலை காட்சியிலிருந்தே தம்பி படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது
தம்பி படம் இன்று ரிலீஸாகிறது. நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினருடன் என்ஜாய் செய்வீர்கள் என நம்புகிறேன் என்று நடிகர் கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.