‘தமிழா தமிழா நாளை நம் நாளே’ 65 பாடகர்கள் சேர்ந்து பாடிய ஒன்றிணைவோம் ஆல்பம்
இக்கட்டான நேரத்தில் ஒன்றாக இணைவோம் என்ற நோக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 65 பாடகர்கள் சேர்ந்து பாடிய ‘தமிழா தமிழா’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த ஆல்பம் சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் அதை எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்ற நோக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 65 பாடகர்கள் சேர்ந்து பாடிய ‘தமிழா தமிழா’ என்ற பாடல் ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர். இந்த ஆல்பம் சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisment
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சத்தால் உலகமே முடங்கிக் கிடக்கிறது. பலரும் இன்று தனியர்கள் போல உணரும் இந்த கால காட்டத்தில் இசையின் முலம் மனித மனங்களை இலகுவாக்கி அனைவரையும் ஒன்றினைக்கும் முயற்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘தமிழா தமிழா நாளை நம் நாளே’ என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த ஆல்பத்தை அறிமுகப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில், “ஒன்றிணைவோம்” என்ற ஆல்பத்தை வெளியிடுவதில் சந்தோஷம். இந்த இக்கட்டான கால கட்டத்தில் ஒரு ஒற்றுமையின் பாடல். இந்த தமிழா தமிழா பாடலை மீண்டும் மிக முக்கியமான காரணத்திற்காக முன்வைக்க 65 பாடகர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
Happy to be releasing #TogetherAsOne, a track of unity during these difficult times ! 65 Singers have come together to present this Thamizha Thamizha reprise for a very important cause
தமிழா தமழா நாளை நம் நாளே என்ற இந்த பாடலை 5 மொழிகளில், ஒரே நாடு, ஒரே பாடல் என்ற வகையில் 65 பாடகர்கள் பாடியுள்ளனர்.
பாடகர் ஷங்கர் மஹாதேவன் ஆலாபனையுடன் தமிழா தமிழா நாளை நம் நாளே என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலுடன் தொடங்குகிறது. இந்த ஆல்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடுகின்றனர். இந்த ஆல்பத்தில் பாடகர்கள், ஆலாப் ராஜு, எம்.அம்ருதா, அனந்து, அனிதா கார்த்திகேயன், அரவிந்த் வேணுகோபால், பிளேஸ், சித்ரா கே.எஸ், தேவன் ஏகாம்பரம், கங்கா, கோபிகா பூர்ணிமா, ஹரிச்சரன், ஹரிஹரன், ஹரினி, ஹரிஷ், ராகவேந்திரா, ஹேமாம்பிகா, ஜானகி ஐயர், கற்பகம், கார்த்திக், கிருஷ்ணச்சந்திரன், எம். எம். மானசி, மகாலட்சுமி ஐயர், மஹதி, மல்லிகார்ஜுன், மனோ, மேகா, எம்.கே.பாலாஜி, மோனிஷா எம்.எம்., நரேஷ் ஐயர், நவீன் மாதவ், பிரவீன் சைவி, பிரியா ஹேமேஷ், பிரியா பிரகாஷ், ராகுல் நம்பியார், ராஜேஷ் கிருஷ்ணன், ரம்யா என்.எஸ் கே, ரணினா, ரஞ்சித் கோவிந்த், ரேஷ்மி, ரீட்டா தியாகராஜன், ரோஷினி, எஸ். பி.பாலசுப்பிரமண்யம், எஸ். பி சைலாஜா, எஸ்.பி. பி சரண், எஸ்.ஜே.ஜனனி, சைந்தவி, சங்கீதா, சத்தியபிரகாஷ், ஷங்கர் மகாதேவன், சரண்யா சீனிவாஸ், ஸ்வேதா மோகன், ஸ்ரீகாந்த் தேவா, சீனிவாஸ், ஸ்ரீவர்தணி, சுஜாதா மோகன், சுர்முகி, டி.எல். மகாராஜன், திப்பு, உன்னிகிருஷ்ணன், உத்தாரா உன்னிகிருஷ்ணன்,வி.வி.பிரசன்னா, வந்தனா சீனிவாசன், வேணுகோபால், விஜய் பிரகாஷ், விஜய் யேசுதாஸ், வினிதா சிவகுமார் உள்ளிட்ட 65 பாடகர்கள் பாடியுள்ளனர்.
இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை தமிழில் கவிஞர் வைரமுத்து, இந்தியில் பி.கே.மிஷ்ரா, தெலுங்கில் ராஜஸ்ரீ மலையாளத்தில் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன், கன்னடத்தில் விஜய் பிரகாஷ் எழுதியுள்ளனர்.
இந்த பேரிடர் காலத்தில், அனைவரும் ஒன்றிணைவோம் வா என்று தொடங்கும் இந்த பாடலை 65 பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாடியிருப்பது சமூக ஊடகங்களில் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"