Advertisment

விஜய் முதல்வராக வேண்டும்; தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கிடா வெட்டி வழிபாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டுதல்; நிர்வாகிகள் கிடா வெட்டி வழிபாடு

author-image
WebDesk
New Update
Vijay chose policy from Thirukkural and Indirect attack on Dravidian parties BJP Tamil News

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டுதல்; நிர்வாகிகள் கிடா வெட்டி வழிபாடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு நடத்தப்பட்டது.

Advertisment

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்தைத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி, அவரது ரசிகர்கள் மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு நடத்தினர். மதுரை மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், கிடா வெட்டி வழிபாடு நடத்தியபின், பொதுமக்களுக்கு கிடா விருந்து அளித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment