தங்கலான் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் விக்ரம் மனம் திறந்து பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
”தங்கலான் படத்தை நான் செய்வதற்கு என்ன காரணம் இருக்கிறது என்று எல்லோரும் கேட்கும்போது நான் பல காரணங்களை சொன்னேன். ஆனால் நான் வீட்டில் இருந்து யோசித்து பார்த்த போதுதான் தெரிந்தது, எனக்கு தங்கலானுக்கு ஒரு தொடர்பு இருக்கிறது. அவனால் செய்ய முடியாது என்று அவனுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் சொன்னாலும் எப்படியும் அவனால் அந்த தங்கத்தை எடுக்க முடியும் என்று அவன் முயற்சிக்கிறேன். நானும் அப்படிதான் இருந்தேன். 3ம் வகுப்பு படிக்கும் வரை முதல் மூன்று ரெங்கில் இருந்தேன். ஆனால் நடிப்பு ஆசை வந்தவுடன் படிக்க முடியவில்லை.
கடைசி மதிப்பெண்கள் பெற்றேன். கல்லூரியில் நடிக்க வேண்டும் என்ற வெறி அதிகரித்தது. ஐஐடியில் பிளாக் காமெடியை மையமாக கொண்ட நாடகத்தில் நடித்தேன். அதற்கு எனக்கு சிறந்த கதாநாயகன் என்ற விருது கிடைத்தது. அப்போதுதான் எனக்கு கால் உடைந்தது. காலை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் மருத்துவர்கள் காலை மீட்டு கொடுத்தனர். ஆனால் இனி சரியாக நடக்க முடியவில்லை. நான் மீண்டும் நடந்தேன். சினிமாவிற்குள் வாய்ப்பு தேடி 10 வருடங்கள் போராடிதான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து எனக்கு சவால்கள் வந்து கொண்டேதான் இருந்தது. அந்த சவால்களை சமாளிக்கும்போது எனக்கு கிடைத்த சிறந்த பரிசு நீங்கள். எனக்கு இந்த வெற்றி கிடைக்கவில்லை என்றால் இன்னும் வாய்ப்பை தேடி முயற்சித்துக்கொண்டேதான் இருந்திருப்பேன். ராவணன் படத்தில் வரும் வசனத்தை போன்று என்னுள் உள்ள பிசாசு. எல்லாவற்றையும் தாண்டிய தாகம் கொண்டது. எனக்கு சவலான ஒரு காதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த ரஞ்சித்திற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என் வாழ்க்கையில் நான் நடித்த அனைத்து இயக்குநர்களால்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ” என்று அவர் கூறினார்.