Advertisment
Presenting Partner
Desktop GIF

தங்கலான் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: கடும் போட்டிக்கு மத்தியில் விக்ரம் படம் வசூலித்தது எவ்வளவு?

Thangalaan box office collection Day 3: விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் 68 சதவீத சரிவிலிருந்து மீண்டு வருவதால், படம் உண்மையில் ட்ரெண்டிங்கில் உள்ளதா? வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான வசூலைக் குவிக்குமா என்பது தெரியும்போது சுவாரஸ்யமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Thangalaan poster

தங்கலன் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது.

Thangalaan box office collection Day 3: இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைபப்டம் சுதந்திர தினத்தில் திரையங்குகளில் வெளியானது. இந்த படம் அவரது சிறந்த பாத்திரங்களில் ஒன்றில் நட்சத்திர நடிகர் விக்ரம் நடித்த படமாகப் பாராட்டப்பட்டது. இந்த படத்தின் இயக்கம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், கோலார் தங்க வயல்களில் நடந்த சுரண்டலைப் பற்றி தங்கலான் ஒரு பெரிய வரலாற்று செய்தியை அளித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Thangalaan box office collection Day 3: The Vikram-starrer holds its own amidst competition, earns almost Rs 24 crore

தங்கலான் திரைப்படம் உள்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.13.3 கோடியுடன் தொடங்கியது. இருப்பினும், தங்கலான் 2ம் நாளில் வெறும் ரூ.4.22 கோடியை குவித்து கடும் சரிவை சந்தித்தது. சாக்னில்க்கின் கருத்துப்படி, இந்த படம் படிப்படியாக மீண்டு முதல் சனிக்கிழமையன்று ரூ. 5.75 கோடியை ஈட்டியதால், 3வது நாளின் வாய்ப்புகள் சிறப்பாக இருந்தது. இதன் மூலம் உள்நாட்டில் மொத்த வசூல் ரூ.23.8 கோடி ஆகும்.

தங்கலான் திரைப்படம் 68 சதவீத சரிவிலிருந்து 2வது நாளில் மீண்டு வருவதால், படம் உண்மையில் ட்ரெண்டில் இருந்து விடுபட்டுவிட்டதா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். மேலும், இந்த படத்திர்கு பாக்ச் ஆபிச் வசூலில் ஒரு சிறந்த ஞாயிற்றுக்கிழமை வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி தங்கலான் படத்துடன் வெளியான டிமாண்டி காலனி 2 படம் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய அருள்நிதி திரைப்படம் முதல் நாளில் ரூ 3.55 கோடிக்கு திறக்கப்பட்டது. அடுத்த நாள் ரூ 2.35 கோடிக்கு சற்று சரிந்தது. 3-வது நாளில் 4.3 கோடி வசூலித்து தங்கலான் படத்துடன் போட்டியிட்டது.

தங்கலான் படத்தில் விக்ரம் உடன் நடிகை பார்வதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், நடிகர் பசுபதி மற்றும் நடிகை மாளவிகா மோகனன் ஆகியோரும் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படம் சனிக்கிழமை 38.55 சதவீதம் பேர் இருக்கைகள் நிரம்பி இருந்தது. இது தெலுங்கில் 35.48 சதவீதத்தை விட சற்று அதிகமாக இருந்தது. தங்கலான் திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் செய்யப்பட்ட விளம்பரம் உண்மையில் பலன் அளிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், மற்ற இரண்டு வெளியீடுகளான டபுள் ஐஸ்மார்ட் மற்றும் மிஸ்டர் பச்சன் ஆகியவற்றின் மோசமான ஓட்டமும் இதற்கு உதவுகிறது. உண்மையில், இரண்டு நேரடி தெலுங்கு படங்களும் சனிக்கிழமையன்று ரூ 1 கோடியை மட்டுமே வசூலிக்க முடிந்தது. அது தங்கலான் தெலுங்கு டப்பிங் படத்தின் வசூலைப் போலவே இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vikram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment