Advertisment

டிமாண்டி காலனி 2 கடும் போட்டி: முன்னேற்றம் கண்ட தங்கலான்; 3-வது நாள் வசூல் நிலவரம்!

விக்ரமின் திரை வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான படம் என்று சொல்லும் அளவுக்கு விக்ரம் தனது நடிப்பில் முத்திரை பதித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
thangalan Movie Vikram

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழில் வெளியான விக்ரமின் தங்கலான், அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 மற்றும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ஆகிய 3 படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், 3 நாட்கள் முடிவில் படங்களின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

Read In English: Thangalaan box office collection Day 3: The Vikram-starrer holds its own amidst competition, earns almost Rs 24 crore

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயராகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தங்கலான் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியானது. விக்ரமின் திரை வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான படம் என்று சொல்லும் அளவுக்கு விக்ரம் தனது நடிப்பில் முத்திரை பதித்த இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. ஆனாலும் படத்தின் திரைக்கதை குறித்து கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

ஒரு சில தரப்பினர் தங்கலான் படத்தின் வசனங்கள் புரியவே இல்லை என்று தங்களது விமர்சனத்தை கூறியுள்ளனர். கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த தங்கலான் படம், முதல்நாள் பாக்ஸ் ஆபிஸில் இந்தியாவில் ரூ.13.3 கோடி வசூலித்தாலும், 2ம் நாளில் சரிவை சந்தித்து ரூ.4.22 கோடி மட்டுமே வசூலித்தது. அதே சமயம் படிப்படியாக மீண்டு நேற்று (ஆகஸ்ட் 17)ரூ. 5.75 கோடியை வசூலித்த தங்கலான், 3வது நாளின் முடிவில் மொத்த உள்நாட்டு வசூல் ரூ.23.8 கோடியாக வசூலித்துள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் 15 அன்று வெளியான அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 படம் தங்கலான் படத்திற்கு கடுமையான போட்டியாக அமைந்துள்ளது. கோப்ரா படத்தை இயக்கி சரிவை சந்தித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படம், முதல் நாளில் ரூ 3.55 கோடி வசூலித்துள்ளது. அடுத்த நாளில் ரூ 2.35 கோடியாக சரிந்தது. 3-வது நாளில் சற்று முன்னேறி  4.3 கோடி வசூலித்து தங்கலான் படத்திற்கு நிகராக உள்ளது. .

பார்வதி, டேனியல் கால்டகிரோன், பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோரும் நடித்துள்ள தங்கலான் படம் நேற்று (ஆகஸ்ட் 17) தியேட்டரில் 38.55 சதவீதம் பேர் இருந்தனர், மேலும் இது தெலுங்கில் (35.48) சற்று குறைவாகவே இருந்தது. இது தெலுங்கு மாநிலங்களில் தங்கலான் படத்தின் ப்ரமோஷன் பெரிய அளவில் பலன் கொடுத்துள்ளது. அதே சமயம் தெலுங்கில் வெளியான டபுள் ஐஸ்மார்ட் மற்றும் மிஸ்டர் பச்சன் ஆகிய படங்கள் மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளதால், தங்கலான் படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment