பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சமீபத்தில் ‘தங்கலான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அப்போது முதலே ரசிகர்கள் திரையரங்கில் இப்படத்தை காண ஆவலுடன் காத்திருந்த நிலையில், இன்று சுதந்திர தின கொண்டாட்டமாக தங்கலான் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கே முதல் காட்சி வெளியான நிலையில், ரசிகர்கள் ட்வீட்டர் பக்கத்தில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் தங்கலான் படம் வெளியானது
Thangalaan twitter review
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“