சுதந்திர தின கொண்டாட்டம்: இன்று திரையரங்குகளை அலங்கரிக்க வரும் 3 தமிழ் படங்கள்
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விக்ரம் நடிப்பில் தங்கலான், அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா ஆகிய 3 தமிழ் படங்கள் இன்று ஒரே நாளில் வெளியாகின்றன.
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விக்ரம் நடிப்பில் தங்கலான், அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா ஆகிய 3 தமிழ் படங்கள் இன்று ஒரே நாளில் வெளியாகின்றன.
Advertisment
தங்கலான்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், கோலார் தங்க வயல் சுரங்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பா.ரஞ்சித் தங்கலானை இயக்கியுள்ளார். பழங்குடியின தலைவரான விக்ரம் பிரிட்டிஷ் அதிகாரிகளின் பேச்சை கேட்டு தங்களது கிராமத்தில் தங்கத்தை தேடுகிறார்.
இதில் சூனியக்காரி மாளவிகா மோகனின் சாபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே தங்கலான் படத்தின் கதை. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
டிமான்டி காலனி 2
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது. அதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டிமான்டி காலனி 2 வெளியாகிறது.
இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அருண் பாண்டியன், பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா, வேட்டை முத்துக்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ரகு தாத்தா
இயக்குநர் சுமன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்நடித்துள்ள திரைப்படம் 'ரகு தாத்தா'.
எம்.எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி மொழி எதிர்ப்பு பிரச்சினையைமையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் பெரிய அளவு வரவேற்பை பெறாததால் இப்படம் வெற்றி படமாக அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“