/indian-express-tamil/media/media_files/ZoST5OGWWVGl9bJ0Fjby.jpg)
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஆக.5) நடைபெற்றது.
தொடர்ந்து நிகழ்ச்சி பேசிய பார்வதி, "பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. இதற்கு முன்பு வாய்ப்பு கிடைத்தும் அது கைகூடாமல் போனது. அது காரணம் இருக்கிறது. நான் ‘தங்கலான்’ படத்தின் கங்கம்மாளாகத்தான் நடிக்க வேண்டும் என இருந்திருக்கிறது. ரஞ்சித் நடிக்க அழைத்தபோது, நான் உடனே ஒப்புக்கொண்டேன்.
ஆனால், நிறைய கேள்விகளைக் கேட்டேன். அவரும் பொறுமையாக பதில் சொன்னார். கங்கம்மாள் என்ற கதாபாத்திரம் என்னுடன் எப்போதும் இருக்கும். சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், இங்கே எல்லாமே அரசியல்தான். அரசியலற்றது என்று எதுவுமே கிடையாது. தங்கலான் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாவது எதார்த்தமாக நடந்தது அல்ல. சமத்துவமின்மை ஏன் நிலவுகிறது என்பதை நாம் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
அதில் உங்களுக்கு அசவுகரியத்தை கொடுத்தாலும் நீங்கள் அதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். கலை என்பது அரசியல். அதை வழிநடத்தும் ராணுவத் தளபதி பா.ரஞ்சித் என்றால், அவரது படையில் நானும் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.