பா.ரஞ்சித் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் , விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு திரையரங்கிலும், திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள மாரிஸ் திரையரங்கில், படம் வெளியானதை முன்னிட்டு ரசிகர்கள் சிலர் தங்கலான் படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் போன்று வேடமணிந்து மேலாடை இன்றி திரையரங்கிற்கு வந்திருந்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/b4b92207-709.jpg)
இதைக் கண்ட சக ரசிகர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து திரையரங்க நிர்வாகம் சார்பாக மேலாடையின்றி உள்ளே வரக்கூடாது என அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் மேலாடை அணிந்த பின்பு திரையரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
க.சண்முகவடிவேல்