New Update
/indian-express-tamil/media/media_files/thalapathy-69.jpg)
நடிகர் விஜய்யின் கடைசி படமாக அமைய உள்ள தளபதி 69 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
தளபதி 69 படத்தின் பூஜையில், நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குனர் ஹெச். வினோத், நடிகர்கள் பாபி தியோல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
நடிகர் விஜய்யின் கடைசி படமாக அமைய உள்ள தளபதி 69 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
நடிகர் விஜய்யின் கடைசி படமாக அமைய உள்ள தளபதி 69 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. பூஜையில், நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குனர் ஹெச். வினோத், நடிகர்கள் பாபி தியோல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
விஜய் அரசியல் பிரவேசம் செய்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் வெங்கட் பிரபு இயக்கத்தில், தி கோட் திரைப்படம் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால், அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தை அறிவித்தார். அதனால், விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, கட்சிக் கொடியை அறிமுகம் செய்துள்ளார். த.வெ.க மாநாடு விக்கிவாண்டியில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 4) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சென்னையில் தளபதி 69 படத்தின் பூஜையில் கலந்துகொண்டார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமகா தளபதி 69 என்று பெயரிடப்பட்டுள்ளது. கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 69 படத்தின் பூஜை சென்னையில் இன்று (அக்டோபர் 40 காலை நடைபெற்றது. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தளபதி 69 படத்தின் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தளபதி 69 படத்தின் பூஜையில், நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வைரலாகி வருகிறது.
தளபதி 69 படத்தில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் என பல நட்சத்திரங்கள் கமிட்டாகியுள்ளனர். இந்த இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் சனிக்கிழமை (அக்டோபர் 5) தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் கடைசி படம் என கருதப்படுவதால், தளபதி 69 படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.