Advertisment
Presenting Partner
Desktop GIF

The Accidental Prime Minister : அச்சு அசல் மன்மோகன் சிங்காக மாறியிருக்கும் அனுபம் கெர்... அசத்தும் டிரெய்லர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The Accidental Prime Minister

The Accidental Prime Minister

The Accidental Prime Minister : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசியல் பயோபிக்காக வெளியாகியுள்ள தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் டிரெய்லர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

சோனியா காந்தியை பிரதமராக ஏற்க முடியாத நிலை உருவான நேரத்தில் ஒரு விபத்தாக எப்படி இந்தியாவின் சிறந்த பொருளாதார நிபுணரான டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானார் என்பதை அவரது உதவியாளர் ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற புத்தகத்தை எழுதி பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

The Accidental Prime Minister : தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்

தற்போது அந்த நாவலை தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்டுள்ள ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. 19 மணி நேரத்தில் இதுவரை 53 லட்சம் பேர் இந்த டிரைலரை பார்த்துள்ளனர். ஒரு மாஸ் ஹீரோவுக்கு கிடைக்கும் வரவேற்பை மன்மோகன் பயோபிக் டிரைலர் பெற்றுள்ளது.

இதில், அனுபம் கெர் மன்மோகன் சிங்காக அச்சு அசலாக தோன்றி நடித்துள்ளார். மேலும், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காங்கிரஸ் தலைவர்களாக பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை விஜய் ரத்னாகர் குட்டா இயக்கியுள்ளார். அனுபம் கெர், அக்‌ஷய் கன்னா, சுசானா பெர்னட், ஆஹானா குமாரா, அர்ஜுன் மாத்தூர், விபின் ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் காங்கிரஸ் மற்றும் மன்மோகன் சிங்-க்கு எதிராக சில விஷயங்கள் இடம்பெற்றிருப்பதால், இதற்கு கடும் கண்டனத்தை அவர்களின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுபம் கெர் கூறுகையில், “தேசப் பற்று படங்கள் எல்லாம் சுதந்திர தினத்திலும், குடியரசு தினத்திலும் தான் வெளியாகும். நாங்கள் எங்கள் படத்தை தேர்தல் நெருங்கும் வேளையில் வெளியிட முடிவு செய்துள்ளோம். இதில் என்ன தவறு இருக்கிறது.

மக்கள் நிறைய சொல்வார்கள். நான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் நான் எனது தேசத்திற்கே அதரவு அளிக்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளிப்பது போல் தோன்றுவது வேறு பிரச்சனை. நாட்டை பற்ரி பேசினால், அரசியல் ஆசை இருப்பதாகவே கருதுகின்றனர். ஆனால் நான் எனது நாட்டை பற்றியே அதிகம் பேச விரும்புகிறேன்.

என்னை பொருத்த வரை ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் ஒரு சர்வதேச படம். இந்த உலகில் அதனை எந்த படத்துடன் வேண்டுமானாலும் ஒப்பிடலாம். ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த படத்தை ஒரு அரசியல் பொருளாக பார்க்கிறார்கள். லின்கன் படத்தை இயக்கியபோது அதன் கதாநாயகனை நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று கேட்கவில்லை. கலையை கலையாக மதித்து, அதன் உழைப்பிற்கு மரியாதை அளிப்போம். பிற கண்ணோட்டங்களை பொதுமக்களிடம் விட்டுவிடுவோம்” என்றார்.

Manmohan Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment