Advertisment

சிக்ஸ் பேக் உடம்புடன் ஃபைட் சீனில் அசத்தும் 106 வயது இந்தியன் 2 தாத்தா: டிரெண்டிங் செய்யும் டோலிவுட் ரசிகர்கள்

சிக்ஸ் பேக் உடம்புடன் சண்டைக் காட்சிகளில் அசத்தும் இந்தியன் 2 தாத்தா இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவருகிறார். இந்தியன் 2 திரைப்படம் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.

author-image
WebDesk
New Update
Indian 2 Accident, Kamal Haasan

கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன்2 இன்று வெளியானது.

உலக நாயகன் கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 தயாராகி இருந்தது. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்தது. இதற்கு முதல்பாகம் கொடுத்த வெற்றிதான் காரணம்.

முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா அப்போதே அகில இந்திய அளவில் பேசப்பட்டார். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது.

படத்தின் ஃபைட் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். முதலில், இந்தியன் தாத்தாவுக்கு 106 வயது ஆகிறது. அவர் எப்படி சண்டையிடுவார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் சிக்ஸ்பேக் உடம்பில் கமல்ஹாசன் செய்யும் சண்டைக் காட்சிகள் மிக பிரமாண்டமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் சிலாகித்துள்ளனர். அதிலும் குறிப்பாக தெலுங்கு ரசிகர்களுக்கு இந்த சண்டைக் காட்சிகள் மிகவும் பிடித்துபோய் உள்ளன.

இந்தியன் 2 தெலுங்கியில் பாரதியுடு என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. முதல் நாளிலே ரசிகர்களின் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான கல்கி படத்தில் கமல்ஹாசன் இரு காட்சிகளில் தோன்றி மிரட்டியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Indian 2 Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment