ரஜினிக்கே சவால் விட்ட நடிகை: சரியா கண்டுபிடிங்க பார்ப்போம்
சமூக ஊடகங்களின் யுகத்தில் நடிகர்கள், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ரஜினிக்கே சவால் விட்ட நடிகையின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. யார் இந்த நடிகை என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
Advertisment
இந்த நடிகை தனது 50-களின் முதல் பாதியில் இருந்தாலும் இப்போதும் முன்னணி இளம் நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு இளமையாகவே இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்தவர், இவருடைய சிறுவயது புகைப்படம் வெளியாகி உள்ளது. பலரும் இது எந்த நடிகை என்று கண்டுபிடிக்க முடியாமல் தோற்றுப்போய் உள்ளனர்.
Advertisment
Advertisements
இந்த சிறுவயது புகைப்படம் எந்த நடிகையின் புகைப்படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். ரஜினிக்கே சவால் விட்டவர் இந்த நடிகை. இப்பொது எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள்.
இந்த படத்தில் இருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான். இளம் வயதில் எப்படி இருக்கிறார் என்று இந்த வீடியோவில் பாருங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனின் என்றென்றைக்கும் மறக்கமுடியாத நீலாம்பரி கதாபாத்திரம். படையப்பா படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நிறைவடைய இருந்தாலும், ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்னும் பேசப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“