kannadasan | mgr | புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் உரிமைக் குரல். இந்தப் படத்தில் விழியே கதை எழுது என்ற பாடல் பட்டித் தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
ஆனால் இந்தப் பாடல் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. ஒருகாலக்கட்டத்தில் எம்ஜிஆர், கண்ணதாசன் ஆகியோர் அரசியலில் தனித்தனி பாணியில் பயணிக்க தொடங்கினார்கள்.
இதனால் பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களுக்கு கவியரசர் பாடல்கள் எழுவதில்லை.
இந்த நிலையில் உரிமைக் குரல் படத்தில் ஒரு காட்சிக்கு 4 பாடலாசிரியர்கள் எழுதியும் அதில் ஸ்ரீதருக்கு திருப்தி கிடைக்கவில்லை.
இதனால் கண்ணதாசனிடம் பாடலை எழுத சொன்னார். கண்ணதாசனும் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டார். அந்தப் பாடலை கேட்ட எம்ஜிஆர் சற்றும் தாமதிக்காமல் இது கண்ணதாசன் பாணி ஆகிட்டே? என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் உண்மையை சொன்னார். இதைக் கேட்டு சிரித்துக் கொண்டே நாங்கள் அரசியலில் தனித்தனி பாதையில் பயணித்தாலும் அவரின் தமிழ் எழுத்துக்கள் மீதும் எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு என்றார். இந்தப் பாடல் பின்னாள்களில் பெரும் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“