/tamil-ie/media/media_files/uploads/2022/06/Kamal-Haasan-1.jpg)
The FDFS of Vikram movie opens at 4 AM across Tamil Nadu
கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் அடுத்த பிரமாண்டமாக வரும் ஜூன் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறது. படத்திற்கான முன்பதிவுகள் மிகவும் வலுவாக உள்ளன, மாநிலம் முழுவதும் படம் அதிக திரையரங்குகளைப் பெற்றுள்ளது.
'விக்ரம்' படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) தமிழ்நாடு மற்றும் பிற இடங்களில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. ஆனால் மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை 3:45 மணிக்கு 'விக்ரம்' படத்தின் FDFS பதிவு செய்யப்பட்டு, முன்பதிவு தொடங்கியுள்ளது.
சிறுவயதிலிருந்தே கமல்ஹாசனுக்கு மதுரை மாவட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், கமல்ஹாசன் மீதுள்ள மோகத்தை இது காட்டுகிறது.
கமல்ஹாசன் இப்படத்தை நாடு முழுவதும் விளம்பரப்படுத்தி வருகிறார்,
'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் ஓய்வுபெற்ற காவலராக நடித்திருக்கிறார் என்றும், படம் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் வலுவான உணர்ச்சித் தொடர்புடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இயக்குனரின் 'கைதி' படத்தைப் போலவே இந்த படமும் உருவாகி உள்ள்தாக லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, ஃபகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத், காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், மேலும் படம் பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.
இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து வருவதால், 'விக்ரம்' டிக்கெட்டுகளுக்கான கிராக்கி அதிகமாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.