டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

நியாயமான கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றும் வரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

டிஜிட்டல் ஒளிப்ரப்பு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திரைத்துறையின் நலன் கருதி தமிழ் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து டிஜிடல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு எதிராக மார்ச் 1ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 5.3.18 ஹைதராபாத்தில் நடைபெற பேச்சுவார்த்தையின் போது, தயாரிப்பாளர்களின் கோரிக்கையை டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவ்வனங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

producer council
எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்த பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்தாலும், நமது நியாயமான கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றும் வரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close