செயின் ஸ்மோக்கர் டூ ஹெல்தி ஈட்டர்: வெற்றிமாறனின் ரியல் லைஃப் டிரான்ஸ்ஃபார்மேஷன் கதை!

திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தனது உணவுமுறை மற்றும் இயற்கை விவசாயத்துடன் தனது ஆரோக்கிய பயணத்தை எவ்வளவு தீவிரமாக மாற்றினார் என்பதை விளக்குகிறார்.

veetri-maaran
The film maker vetrimaaran real life transformation story

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தனது உணவுப் பழக்கவழக்கங்கள் தன்னை ஆரோக்கியமாக்கியது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

வெற்றிமாறன், திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பதால், இரவு முழுவதும் இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் அவரது குடும்பத்தினர் அவரிடமிருந்து இனிப்புகள் மற்றும் தின்பண்டங்களை மறைக்க வேண்டியிருந்தது. அதற்கு மேல், அவர் ஒரு செயின் ஸ்மோக்கர், அவருக்கு 13 வயதில் இருந்து இந்த பழக்கம் இருந்தது.

பல ஆண்டுகளாக இடைவிடாத புகைபிடித்தலுடன், அசாதாரண உணவுப் பழக்கமும் இணைந்து, வெற்றிமாறனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போதுதான் வெற்றி, ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தார். பிறகு மருத்துவ உதவியை நாடினார்.

2008 ஆம் ஆண்டில், வெற்றிமாறன் சில பரிசோதனைகளை மேற்கொண்டபோது, ​​அவருக்கு இதய நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதைக் கண்டுபிடித்தார். அவர் வாழ்க்கையில் ஆரோக்கியமான தேர்வுகளை செய்ய முடிவு செய்த தருணம் அதுதான்.

வாரணம் ஆயிரம் (2008) இரவு காட்சிக்கு சென்றிருந்தேன். தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் சிகரெட் குடித்தேன். அதன்பிறகு நான் ஒருபோதும் புகைபிடித்ததில்லை” என்று வெற்றிமாறன் ஃப்லிம் கம்பெனியன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அதன்பிறகு, வெற்றிமாறன் தனது உணவுமுறை, கீட்டோ டயட் மற்றும் இயற்கை விவசாயத்துடன் தனது பயணத்தை எவ்வளவு தீவிரமாக மாற்றினார் என்பதை விளக்குகிறார். இருப்பினும், அவர் தனது உணவுப் பழக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கும் முன், ஒரு பெரிய மறுப்பை இடுகிறார்.

நேர்காணலின் போது அவர் சொன்னது அனைத்தும், அவருக்கு வேலை செய்த விஷயங்கள். மேலும் இது நிபுணர்களின் வழிகாட்டுதலின்றி, யாராலும் நடைமுறைப்படுத்தப்படக் கூடாது.

ஆனால், வெற்றிமாறனின் ஆரோக்கியமான உணவைப் பற்றிய அறிவும், நம் உடலுக்கு எது நல்லது என்று தீர்மானிக்கும் அவரது எளிய அளவுகோலும் போதும், நாம் நம் வாயில் வைப்பதைப் பற்றி விழிப்புடன் இருக்க நம்மை ஊக்குவிக்கும்.

சும்மா அல்ல. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ; அதுவே நீங்கள் என்று சொல்கிறார்கள்.

தற்போது வெற்றிமாறன் வாடி வாசல் படத்தின் முன் தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: The film maker vetrimaaran real life transformation story

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com