சன்னி இஸ் பேக்! மே 18ம் தேதி வர இருக்கும் சர்பிரைஸ் என்ன தெரியுமா?!?!

தமிழில் முதல் முறையாகக் கால்பதித்துள்ள சன்னி லியோன் நடித்துள்ள படத்தின் போஸ்டர் வரும் மே 18ம் தேதி வெளியாகிறது. சன்னியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், ‘வீரமாதேவி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன் முறையாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முகத்தையே காட்டாமல், மையிட்ட இரண்டு கண்களை மட்டும் காட்டி ரசிகர்களை ஈர்க்கிறார் படத்தின் இயக்குநர்.

சன்னி லியோனின் பிறந்த நாளான மே 13ம் தேதி இந்த போஸ்டரை படத்தின் குழுவினர் ட்விட்டரில் ரிலீஸ் செய்தனர். மேலும் படத்தில் சன்னி லியோனின் தோற்றம் ஃபர்ஸ்ட் லுக் வரும் மே 18ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். வீரமாதேவி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்குச் சன்னி லியோன் அறிமுகமாகியுள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது.

வீரமாதேவி படத்தை, பொன்ஸ் ஸ்டீபன் தயாரித்துள்ளார். இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில், சன்னி லியோன் முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடிகர் நவ்தீப் வில்லன் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரிஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.

×Close
×Close