Advertisment
Presenting Partner
Desktop GIF

ஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்!

அவரது அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெயலலிதாவாக நித்யா மேனனை தேர்வு செய்ய காரணம் நீங்கள் தான்.. ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்!

ஜெயலலிதா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை பிரியதர்ஷினி டைரக்டு செய்கிறார். இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

பிரியதர்ஷினி டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் ‘சக்தி’ படத்தை இயக்கி வருகிறார். இவர் அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருக்கிறார்.இதன் அறிவிப்பு வெளியாகும் முன்னரே படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலூங்கி இருந்தது.

குறிப்பா ஜெ.வின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்? என்று எதிர்ப்பார்ப்பு பன்மடங்கு அதிகம். ஆரம்பத்தில் இந்த ரோலில் நடிப்பதாக நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் என பலரின் பெயர் அடிப்பட்டது.ஆனால் இறுதியில் ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பவர் நடிகை நித்யா மேனம் என்பது உறுதியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை நான் இயக்குகிறேன் நீ இயக்குகிறேன் என போட்டி அதிகமாக இருந்தது. இயக்குனர் விஜய் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது இந்நிலையில் பெண் இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெ வின் வாழ்க்கை படமாக இருக்கிறது என்ற செய்தி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் சினிமா வட்டாரங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பில்மிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஜெயலலிதாவின் கதாபாத்திரம் உறுதியான நிலையில், அவரின் உற்ற தோழியான சசிகலா படத்தில் யார் நடிக்கிறார்? என்று எதிர்ப்பார்பு மேலூங்கி உள்ளது.

இந்த ரோலில் நடிகை வரலட்சுமி நடிப்பதாக தகவல்களும் கசிந்துள்ளான். ஆனால் அந்த தகவலை மறுத்துள்ள வரு, இதுக் குறித்து உறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் ஜெ. ரோலில் நித்யாமேனை நடிக்க வைத்தது குறித்த ரகசியத்தை டைரக்டு பிரியதர்ஷினி பகிர்ந்துள்ளார்.

publive-image

”ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்துக்கு ‘த அயன் லேடி’ என்று பெயர் வைத்துள்ளோம். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க அவரது குணநலன்களுடன் ஒத்துப்போகிற நடிகையை தேடினோம். ரசிகர்கள் சிலரிடம் இதுக் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. நித்யாமேனன் பொருத்தமாக இருப்பார் என்று பலரும் கூறினர். இதையெல்லாம் வைத்து தான் அவரை தேர்வு செய்தோம்.திரைக்கதை அவருக்கு பிடித்துப்போய் நடிக்க சம்மதித்து விட்டார்” என்று கூறியுள்ளார்.

ச இதர நடிகர்–நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. பிப்ரவரி மாதம் 24–ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் படப்பிடிப்பை தொடங்குகிறோம் என்றார் .

ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் ஆகியோரும் படமாக்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தன்னிடம் அனுமதி பெறாமல் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க கூடாது என்று அவரது அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

Jayalalithaa Nithya Menen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment