தி கேரளா ஸ்டோரி படத்தின் நாயகி அடா ஷர்மாவின் செல்போன் எண் இணையத்தில் கசிந்துள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த எண்ணில் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசி வருவது பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் இயக்குனர் சுதீப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ந் தேதி வெளியான படம் தி கேரளா ஸ்டோரி. கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டதாக கூறப்பட்ட இந்த படத்தில் அடா ஷர்மா, சித்தி இதானி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் ரூ 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் படத்திற்கு வரிவிலக்கும், மேற்குவங்க மாநிலத்தில் படத்திற்கு தடையும் விதிக்கப்ட்டது.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை அடா சர்மா, கடந்த சில தினங்களுக்கு முன்பு சில விஷமிகள் என் செல்போன் எண்ணை இணையத்தில் கசிய விட்டுள்ளனர். இந்த எண்ணில் என்னை தொடர்புகொண்ட சிலர் ஆபாசமாக பேசி வருகின்றனர். சாதாரண ஒரு பெண்ணின் செல்போன் எண்ணும், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியானால் அவள் எப்படி உணர்வாளோ அந்த உணர்வை அனுபவித்து வருகிறேன்.
இது மிகவும் கீழ்த்தனமாக செயல். என்னிட்டம் இப்படி பேசியவர்களின் வக்கிரமான மனநிலையத்தான் இந்த செயல் காட்டுகிறது. தி கேரளா ஸ்டோரி படத்திலும் இதே போன்ற ஒரு காட்சி உள்ளது. என்னுடைய எண்ணை பொதுவெளியில் வெளியிட்ட நபர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய மொபைல் நம்பரை மாற்றுவதே குற்ற செயல்களில் ஈடுபட்ட நபரை சிறையில் அடைக்க நான் தரும் விலையாக இருக்கும் என்று கூறியுள்ளார். அடா சர்மாவின் இந்த பேட்டி இணையத்தி்ல வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil