கடந்த 2008-ம் ஆண்டு இந்தியில் வெளியான 1920 என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஆதா சர்மா.

அதன்பிறகு ஒரு சில இந்தி படங்களில் நடித்த அவர், ஹார்ட் அட்டாக் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

தொடர்ந்து ரானா விக்ரமா என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமான ஆதா சர்மா இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மாமன் வெயிட்டிங் என்ற பாடலுக்கு நடனமாடிய ஆதா சர்மா தொடர்ந்து சார்ளி சாப்ளின் என்ற படத்தில் சாரா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார்.

இஸ்லாமிய சமூகம் குறித்து சர்ச்சையாக கருத்துடன் வெளியான இந்த படத்திற்கு கடும எதிர்ப்பு கிளம்பினாலும் படம் சிறந்த ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆதா சர்மா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“