scorecardresearch

தி கேரளா ஸ்டோரி: எகிறிய கலெக்ஷன்; பதானுக்கு அப்புறம் இந்த ஆண்டு இதுதான் டாப்!

The Kerala Story box office collection : தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலானி ஆகியோர் நடித்துள்ளனர்,

The Kerala Story box office collection Day 2 Adah Sharmas controversial film gains big earns almost Rs 20 crore
தி கேரளா ஸ்டோரி வெள்ளிக்கிழமை (மே 5) தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

The Kerala Story box office collection : அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் தி கேரளா ஸ்டோரி.
மூளைச் சலவை செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்ட இந்து, கிறிஸ்தவ பெண்கள் சிரியாவில் உள்ள பயங்கரவாத இயக்கத்தில் இணைவது போல் கதை உள்ளது.

இந்தப் படத்தில் முதலில் 32 ஆயிரம் பெண்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தார் என்று கூறப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு வர பின்னர் அந்த எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டது.
இந்தப் படம் அடிப்படைவாத இயக்கங்களின் கடும் எதிர்ப்பை மீறி வெள்ளிக்கிழமை (மே 5) தியேட்டரில் ரிலீஸ் ஆனது. படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் முதல் நாள் ரூ.8.03 கோடியும், இரண்டாம் நாள் ரூ.11.22 கோடி என மொத்தம் ரூ.19.25 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து, இந்தி திரைப்பட சந்தையில் இந்தப் படம் கிட்டத்தட்ட 36.13 சதவீத மார்க்கெட்டை கைப்பற்றியுள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும், பதானுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது பெரிய வெற்றிப் படமாக கேரளா ஸ்டோரி உள்ளது. எனவே இது வரும் சில நாட்களில் பிளாக்பஸ்டராகவும் உருவாகலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: The kerala story box office collection day 2 adah sharmas controversial film gains big earns almost rs 20 crore