இயக்குனர் சுதிப்தோ சென்னின் ‘தி கேரளா ஸ்டோரி’ 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பாலிவுட் ஹீரோ சல்மான் கான் படத்தை பின்னுக்குத் தள்ளி ரூ. 50 கோடி வசூலை நெருங்குகிறது.
நடிகை அதா ஷர்மா நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திங்கட்கிழமை வசூலில் வெற்றி பெற்றது. ஆனால், இதை தி காஷ்மீர் ஃபைல்ஸைச் சுற்றியுள்ள வெறித்தன வசூலுடன் ஒப்பிட முடியவில்லை.
இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ படம் சர்ச்சைகளை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்தப் படம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் தீவிரப்படுத்தப்பட்ட கேரளப் பெண்களின் உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. பதான், கிசி கா பாய் கிசி கி ஜான், து ஜூதி மைன் மக்கார் மற்றும் போலா ஆகிய படங்களுக்குப் பின் இந்த ஆண்டின் முதல் ஐந்து பெரிய வசூலைப் பெற்ற பிறகு, இந்த படம் திங்கட்கிழமையும் வசூல் அதிகரித்தது.
‘தி கேரளா ஸ்டோரி’ வெளியான நான்காவது நாளில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில், கோடிகளில் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டியது என்று சினிமா துறை டிராக்கர் சாக்னில்க் தெரிவித்துள்ளது. ஹிந்தி மார்க்கெட்டில், 27.57% ஆக்கிரமிப்புடன், திங்கள்கிழமை ரூ 10.51 கோடி வசூலித்துள்ளது. சல்மான் கானின் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ படத்தின் திங்கட்கிழமை வசூலை விட இது சற்று சிறப்பாக வசூல் செய்துள்ளது. சல்மான் கானின் படம் திங்கள்கிழமை ரூ. 10.17 கோடியை வசூலித்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ ரூ.10.51 கோடி வசூலித்துள்ளது. கடந்த ஆண்டு விவேக் அக்னிஹோத்ரியின் சர்ச்சைக்குரிய வெளியீட்டான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வசூலித்ததை விட, ‘தி கேரளா ஸ்டோரி’யின் திங்கள்கிழமை வசூல் அதிகம் இல்லை. அனுபம் கேர்-நடித்த காஷ்மீர் ஃபைல்ஸ் படம் மெதுவான தொடக்கத்திற்குப் பிறகு வேகம் எடுத்தது. அதன் முதல் திங்கட்கிழமையில் ரூ 15.05 கோடி வசூலித்தது.
இதன் மூலம், ‘தி கேரளா ஸ்டோரி’யின் மொத்த வசூல் சுமார் 45.75 கோடி ரூபாய் ஆகும். இன்றே ரூ.50 கோடியை கடக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசாங்கத்தின் தடை மற்றும் தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மல்டிபிளக்ஸ்களில் இருந்து திரும்பப் பெற்றதன் மூலம் படம் பாதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
தமிழ்நாட்டில் எதிர்ப்புகளுக்கு பயந்து பல திரையரங்குகள் படத்தை திரையிட மறுத்ததை அடுத்து படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல் ஷா ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். படத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சந்திக்கும் நஷ்டம் குறித்து கேட்டதற்கு, விபுல் ஷா, “நாங்கள் இப்போது லாபம் அல்லது நஷ்டம் பற்றி பேச மாட்டோம். மேலும், அதிகமான மக்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்கு மட்டுமே முயற்சி செய்வோம். ஒரு மாநில அரசோ அல்லது தனியாரோ படத்தை நிறுத்த முயற்சி செய்தால் சட்டப்படி சாத்தியமான எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்” என்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.