தி கேரளா ஸ்டோரி, ஏகப்பட்ட சர்ச்சை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது. படத்தை டைரக்டர் சுதிப்தோ சென் இயக்கியுள்ளார்.
ஆதா சர்மா, யோகிதா பிகானி, சித்தி இத்னானி, சோனியா பலானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான்-துருக்கி-சிரியா உள்ளிட்ட நாடுகளில் எல்லைப் பகுதிகளில் ஆயுத தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொள்ளும் 3 பெண்களின் வலியை படத்தின் ஒன்லைனர் கதை.
முதலில் இந்தப் படம் 32 ஆயிரம் பெண்களின் உண்மைக் கதை எனக் கூறி விளம்பரப்படுத்தப்பட்டது. அடுத்து எதிர்ப்பு காரணமாக அந்த எண்ணிக்கை 3 ஆக குறைக்கப்பட்டது.
படத்தில் காட்சியமைப்புகளும், நடிப்பும் சரியாக பொருந்தவில்லை. கேரளம் ஆபத்தில் உள்ளது, அங்குள்ள கிறிஸ்தவ, இந்துப் பெண்கள் இஸ்லாமிய ஆண்களால் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்ற கருத்தை சொல்ல படம் முனைகிறது.
படத்தின் கதாநாயகியான மூன்று பெண்களும் தன் சக இஸ்லாமிய தோழி ஒருவரால் மூளைச் சலவை செய்யப்படுகிறார். பெண்கள் தங்கள் முகத்தை புர்காவுக்குள் ஒளித்துக் கொள்ள வேண்டும். அப்போது தீய ஆண்களின் பார்வை நம்மீது படாது.
இந்த உலகை காக்க வந்த ஏக இறைவன் அ ல்லா மட்டுமே எனக் கூறி அந்தப் பெண் இந்து, கிறிஸ்தவ பெண்ணை மூளைச் சலவை செய்கிறார்கள்.
சில இடங்களில் லவ் ஜிகாத் பற்றி படம் பேசுகிறது. இஸ்லாமிய ஆண்கள் தங்களின் கருவை அப்பாவி பெண்களின் வயிற்றில் வளரச் செய்கிறார்கள் என்றெல்லாம் படம் நீள்கிறது.
மேலும் இந்தப் பெண்கள் பாலியல் அடிமைகளாக, தற்கொலைப் படையினராக மாற்றப்படுகின்றனர் எனவும் படம் கூறுகிறது.
இந்தப் படம் வெறுப்பை விதைத்து பிரிவினைவாதத்தை தூண்டும் முயற்சி என முதலமைச்சர் பினராய் விஜயனும் எச்சரித்துள்ளார்.
அதுபோன்ற காட்சிகளும், வெற்றுக் கூச்சலும் படத்தில் நிரம்ப உள்ளன. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ரேட்டிங்கில் ஒரு ஸ்டார் வழங்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“