Advertisment

இந்த அம்மணிக்கு மட்டும் ரூ20 கோடி சம்பளமாம்... போட்ட பணத்தை எடுத்தாரா லெஜன்ட் அண்ணாச்சி?

தமிழில் தயாரான தி லெஜன்ட் தற்போது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பான் இந்திய படமாக மாறியுள்ளது.

author-image
WebDesk
New Update
இந்த அம்மணிக்கு மட்டும் ரூ20 கோடி சம்பளமாம்... போட்ட பணத்தை எடுத்தாரா லெஜன்ட் அண்ணாச்சி?

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் அருள் சரவணன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தி லெஜன்ட். ஊர்வசி ரௌத்தேலா கீர்த்தி திவாரி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தில், பிரபு, நாசர், விஜயகுமார், தம்பிராமையா, சிங்கம் புலி, விவேக், யோகிபாபு, மயில்சாமி, சுமன் கிருஷ்ணவம்சி, உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

Advertisment

தமிழில் தயாரான இந்த படம் தற்போது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானி பான் இந்திய படமாக மாறியுள்ளது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஹீரோ என அறிமுகமாகும் அருள் சரவணன் இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களை சந்தித்துவருகிறது.

மேலும் படத்தில் ஹரிஸ் ஜெயராஜின் இசை மற்றும் வேல்ராஜூன் ஒளிப்பதிவை தவிர மற்ற எதுவும் சிறப்பாக இல்லை என்று ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில், பாலிவுட்டில் நடித்து பாராட்டுக்களை பெற்ற நடிகை ஊர்வசிக்கு தமிழில் சிறப்பாக அறிமுகம் கிடைக்கவில்லை.  தனது நடிப்பு மற்றும் நடனத் திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை.

நடிகை-மாடல் அழகி போட்டியில் ஆர்வம் கொண்ட ஊர்வசி, அழகி போட்டியில் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் பாலிவுட் படத்தில் நடித்து நடிப்புக்காக பாராட்டுக்களை பெற்ற அவர் தற்போது தமிழில் தனது அறிமுகப்படத்தில் கோட்டைவிட்டுள்ளார்.  அதே சமயம் தி லெஜன்ட்  படத்தில் நடித்ததற்காக ஊர்வசி சரூ 20 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

இதற்கிடையில், கலவையான விமர்சனங்களை பெற்று வரும் தி லெஜன்ட், ட்விட்டரில் கருத்தை பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், இடைவெளிக்கு பிறகு அதிரடி காட்சிகள் அருமை. அந்த ஆக்‌ஷன் காட்சியின் பின்னணி இசை நெஞ்சை நெகிழ வைக்கிறது. சஸ்பென்ஸ் உச்சத்தை எட்டுகிறது என்று கூறியுள்ளார்.

அதே சமயம் மற்றொரு ரசிகர், “தி லெஜண்ட்= வீராசாமி, ஒரு வார்த்தை விமர்சனம். ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல் சிறப்பாக செய்துள்ளார். லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி ப்ளீஸ் பான் இந்தியா மூவி பண்ணி கோலிவுட் மானாதா வாங்கதீங்க என்று பதிவிட்டுள்ளார். கல்வி முறை பற்றிய கதையான தி லெஜனட் படத்தில் ஊர்வசி ரௌவுதாலா மைக்ரோபயாலஜிஸ்ட் மற்றும் ஐஐடி மருத்துவராக நடித்துள்ளார்.

இதனிடையே நேற்று வெளியான தி லெஜன்ட் படம் வசூலில் சறுக்கலை சந்தித்துள்ளதாகவும், முதல்நாளில் தமிழகம் முழுவதும் ரூ 1.5 கோடி வசூலித்துள்ளதாகம், உலகம் முழுவதும் ரூ 2 கோடி வசூலை கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஊர்வசி அடுத்ததாக தில் ஹை கிரே படத்தில் நடிக்கிறார். சுசி கணேசன் இயக்கியுள்ள இந்த படத்தில் அக்ஷய்குமார், விவேக் ஓபராய் மற்றும் வினீத் குமார் சிங் ஆகியோருடன் நடிக்கறார். சமூக ஊடகங்களில் ஒரு அப்பாவி மனிதனை சிக்கவைத்ததற்காக ஒரு நபரை விசாரிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பற்றிய படம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Legend Saravana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment